For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரசூட் மூலம் கீழே குதித்து ”கூகுள்” துணைத்தலைவர் புதிய சாதனை!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகத்தின் பிரபலமான சர்ச் இஞ்சினான கூகுளின் துணைத்தலைவர் பாராசூட் மூலமாக தரையில் குதித்து சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்க கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் . சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை புரிந்தார்.

 Google VP Breaks Record for Highest Skydive

பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்ப்பரேஷன் இதற்கான போட்டி நடத்தியது. அதில் பங்கேற்க அவர் ஹீலியம் பலூனில் பூமிக்கு மேலே 40 கிலோ மீட்டர் உயரத்துக்கு பறந்து சென்றார்.

அங்கிருந்து பாராசூட் மூலம் மணிக்கு 1300 கிலோ மீட்டர் வேகத்தில் குதித்து சாதனை படைத்தார். இவர் 1 லட்சத்து 35 ஆயிரத்து 890 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியாவை சேர்ந்த பெலிஸ் யாம் கார்னர் 1 லட்சத்து 28 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தார். அதுவே உலக சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது இவர் முறியடித்துள்ளார்.

English summary
A senior vice president for Google cut himself loose from a balloon and parachuted 135,908 feet to earth on Friday, setting a new world record in skydiving.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X