தடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம்
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 8 நாட்களில் மட்டும் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 8 நாட்களில் மட்டும் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அங்கு மோசமான கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
|
குண்டுகள்
இந்த குண்டுகள் பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும்.
|
ஐநா தடை
இந்த குண்டுகள் பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஜநாவும் தடை செய்துள்ளது. ஈராக் போரிலும், இலங்கை போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. தற்போது சிரியா அரசும், ரஷ்யா அரசும் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.
|
என்ன நடக்கும்
இந்த குண்டுகளை பயன்படுத்தினால் மோசமாக மூச்சு அடைப்பு ஏற்படும். சரியாக சுவாசிக்க முடியாது. கண்கள் எரிய தொடங்கும். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் மரணம் ஏற்படும். இதில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.
— cooland ☭ (@cooland413) February 26, 2018 |
குழந்தைகள்
இதில் இருந்து தப்பிக்க உடலில் அதிக வேகத்தில் நீர் பாய்ச்சி அடிப்பார்கள். ஒரு இடம் விடாமல் உடலில் வேகமாக நீர் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் காப்பாற்ற முடியும். ஆனால் குழந்தைகள் இந்த காற்று பட்டவுடன் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். இது குழந்தைகளை குறிவைத்து ஏவப்படுகிறது.
|
மாட்டிக் கொண்டனர்
இந்த குண்டுகள் சிரியா போரில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அறிகுறி கொண்டு 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் அங்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
வீடியோ வெளியானது
இந்த குண்டு காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் ஆடைகள் களையப்பட்டு தண்ணீர் ஊற்றப்படுகிறது. அவர்கள் வலியில் கத்தும் நிகழ்வு வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
|
மரணம் அடைந்தனர்
இந்த கெமிக்கல் குண்டுகள் காரணமாக பல குழந்தைகள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். கெமிக்கல் குண்டு காரணமாக இறந்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
|
மிகவும் மோசம்
அதேபோல் மூச்சு அடைப்பு காரணமாக பல குழந்தைகள் உயிருக்கு போராடி வருகிறார்கள். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.
|
போராளிகளும்
தற்போது போராளிகளும் இந்த குண்டுகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு படைகளை சமாளிக்க முடியாமல் போராளிகள் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இன்னும் கொடிய கேஸ்கள் அவர்களிடம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications