தாண்டவமாடும் வறட்சி.. பசியால் வாடும் மக்கள்.. யானைகளை கொல்ல திட்டம்.. எந்த நாட்டில் தெரியுமா?
விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் பசியைப் போக்குவதற்காக யானை உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ந்து போன வேளாண் பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள் என வறட்சி கோரதாண்டவம் நாடு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ளது நமீபியா நாடு. இந்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களின் பசியைப் போக்குவதற்கு வனவிலங்குகளை வேட்டையாடி உணவாகப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 83 யானைகள் உள்ளிட்ட 723 காட்டு விலங்குகளை கொல்லும் திட்டம் மிகவும் தற்போது அவசியம் என்று நமீபியா சுற்றுச்சூழல், காடுகள், சுற்றுலாத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வறட்சி என்பது எப்போதும் இருப்பதுதான். ஆனாலும், கடந்த பத்தாண்டுகளில் 2018 முதல் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, தென் ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின்கீழ் ஜூன் மாதத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சுமார் 30 லட்சம் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தென்ஆப்பிரிக்காவில் இயற்கை நிகழ்வான எல் நினோ காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் கடும் வெப்பமும், வறண்ட வானிலையும் காணப்பட்டு வருகிறது. இதனால், வேளாண் பயிர்கள் காய்ந்துபோய் உள்ளன. சரியான உணவு கிடைக்காததால் கால்நடைகள் அனைத்தும் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, வன விலங்குகளை உணவாகப் பயன்படுத்தலாம் என்ற முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
யானைகள் தவிர 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள், 100 எலாண்ட்ஸ் மான் வகை ஆகியவற்றைக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வறட்சிக் காலங்களில் வன விலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது வழக்கம்.
ஆனால், தற்போது நமீபியா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக நமீபியாவில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டின் 84 சதவீத உணவு வளங்கள் ஏற்கெனவே தீர்ந்து போயுள்ளது. இந்நாட்டுக்கு கடந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக 49 லட்சம் டாலர் உதவியை அமெரிக்க உதவி நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உணவுத் தேவைக்காக ஏற்கனவே 157 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. அதன் மூலமாக சுமார் 63 டன் இறைச்சி உணவு கிடைத்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள யானைகள் சராசரியாக 13 அடி உயரமும், 13 ஆயிரம் பவுண்டு எடை கொண்டவையாகவும் உள்ளன. இவை கிட்டத்தட்ட ஒரு நாளில் 300 பவுண்டு தாவரங்களை உண்ணுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவன்னா யானைகள் நமீபியா நாடு மற்றும் மற்ற தென்னாப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் உள்ளன. இவை அழிந்து வரும் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தலைமுறைகளில் இந்த யானைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து வந்த நிலையில், சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
2022 ஆம் ஆண்டில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தியதில் சவன்னா யானைகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகளுடன் குறையாமல் உள்ளது தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய இந்த யானைகள், கடும் வறட்சி காரணமாக உணவுக்காக கொல்லப்படும் சூழல் உருவாகியுள்ளளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications