6 ஆண்டு காதல்... கண்ணாடி முன் நின்றபடி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட யு.கே. பெண்
லண்டன்: வேறொரு ஆணையோ அல்லது பெண்ணையோ தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விநோதச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
ஆணும், பெண்ணும் திருமணம் எனும் பந்தம் மூலம் இணைந்து வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என்பது நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழக்கம். ஆனால், சிலர் அதிலிருந்து வேறுபட்டு ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்வதுண்டு.
இத்தகைய ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு இன்னும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டு தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார் இங்கிலாந்து பெண் ஒருவர்.
போட்டோகிராபர்...
இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் இளம்பெண் கிரேஸ் ஹெல்டர். போட்டோகிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லையாம்.
6 ஆண்டுக் காதல்...
இதனால், கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு தானே காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். தன் காதலின் அடுத்த கட்டமாக தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தார்.
திருமண அறிவிப்பு...
அதன்படி, லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டு தனது திருமணத்தை அறிவித்தார் கிரேஸ். பின்னர், தன் திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் வாங்கியுள்ளார்.
தடபுடல் விருந்து...
நிச்சயிக்கப்பட்டபடி, தனது திருமண நாளன்று டேவன் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேரை சமீபத்தில் அழைத்து, அவர்களுக்கு தடபுடலாக விருந்து அளித்தார்.
தனக்குத் தானே திருமணம்...
பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தனக்குத் தானே மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டார் கிரேஸ். பிறகு கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு தானே முத்தம் கொடுத்து அன்பையும் பறிமாறிக் கொண்டார்.
வித்தியாசமான அனுபவம்...
கிரேசின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இது வித்தியாசமான திருமண அனுபவத்தைப் பார்த்த அனுபவத்தைத் தந்ததாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications