வேனில் போதுமான இடமில்லை.. பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த பாசக்கார பாட்டி!
அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தனது பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தனது பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லீமோனி செக் என்ற 62 வயதான அமெரிக்க மூதாட்டி தனது பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுகளிலிருந்து தனது பேரக்குழந்தைகளை அவர் வெளியே திறந்து விடும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

குழந்தைகளுக்கு ஆபத்து
இந்த அதிர்ச்சி வீடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து போலீசார் லீமோனி மீது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக வழக்குபதிவு செய்தனர்.

அதிர்ச்சி தகவல்
இதுதொடர்பாக ஏழு மற்றும் எட்டு வயதுள்ள அந்த இரண்டு குழந்தைகளையும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த குழந்தைகள் பல அதிர்ச்சித் தகவல்களை கூறினர்.

நாய்கூண்டில் அடைத்து
அதாவது, தங்கள் பாட்டி வேனில் போதுமான இடம் இல்லை என்று கூறி தங்களை நாய் கூண்டில் அடைத்து கொண்டு வந்ததாக குழந்தைகள் கூறினர்.

ஏசி கூட போடாமல்
அவர்களை அடைத்து வைத்திருந்த கூண்டு மிகவும் சிறியதாக இருந்ததாகவும், லீமோனி ஏசி கூட போடாமல் வேனின் ஜன்னல்களை மூடி வைத்திருந்ததாகவும் குழந்தைகள் கூறினர்.

விசாரணை
இதையடுத்து குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக மூதட்டி லீமோனி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications