You ****.. உங்களை கல்லறைக்கு அனுப்பாமல் விட மாட்டேன்! கர்ஜித்த உக்ரைன் அதிபர்! காரணம் ஒரு குடும்பம்!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோபமாக கொடுத்த பேட்டி ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அவர் முதல் முறை மிகவும் கோபமாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேட்டி அளித்து இருக்கிறார்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முன்னாள் நடிகர். அதிலும் இவர் காமெடி நடிகர். நம் நாட்டில் வடிவேல் திடீரென பிரதமர் ஆனால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் இவர். ஆனால் ரஷ்ய போர் இவரை பிரதமர் என்பதையும் தாண்டி சூப்பர் ஹீரோ போல மாற்றி உள்ளது.

மேற்கு உலகமே கொண்டாடும் புதிய தலைவராக உக்ரைன் அதிபர் உருவெடுத்து இருக்கிறார். பொதுவாக மீடியா பேட்டிகளில் போருக்கு இடையிலும் அன்பாக பேச கூடியவர் செலன்ஸ்கி. ஆனால் இதே செலன்ஸ்கி இன்று காலை கொடுத்த பேட்டியில் ஆக்ரோஷமாக காணப்பட்டார். காரணம்.. ஒரு குடும்பம்.

 எங்கிருந்து வெளியேறுகிறார்கள்

எங்கிருந்து வெளியேறுகிறார்கள்

உக்ரைன் கீவ் வெளியே இருக்கும் சின்ன கிராமம் லிர்ப்பின். இது உக்ரைன் தலைநகர் கீவ் எல்லை பகுதியில் இருக்கிறது. இங்கு குறைவான மக்களே வசித்து வருகிறார்கள். போர் காரணமாக அதிலும் பலர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று இரவு இங்கிருந்து 20 பேர் வரை வெளியேற முயன்று உள்ளனர். அங்கு பெரிய அளவில் உக்ரைன் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.

பெரிய அளவில் இல்லை

பெரிய அளவில் இல்லை

12 உக்ரைன் வீரர்கள் மட்டுமே அந்த எல்லை பகுதியை காத்துகொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருக்கும் பாலத்திற்கு இன்னொரு பக்கம் ரஷ்ய படைகள் வந்துள்ளது. இந்த ரஷ்ய படைகள் மிக வேகமாக செயல்பட்டு, பாலத்தில் இருந்து துப்பாக்கிகள் மூலம் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதேபோல் குண்டுகளை வீசியும் இந்த பக்கம் இருந்தவர்களை தாக்கி உள்ளனர். இதை உக்ரைன் வீரர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

பாலத்தில் வைத்து தாக்குதல்

பாலத்தில் வைத்து தாக்குதல்

பாலத்திற்கு வந்த ரஷ்ய படைகள் மிக கொடூரமாக தொடர்ந்து தாக்கி உள்ளனர். ராணுவத்தினரை குறி வைக்காமல் பொது மக்களை குறி வைத்து ரஷ்யா தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அந்த தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதில் 1 குழந்தை பள்ளி படிக்கும் வயது. இன்னொன்று கை குழந்தை. அதேபோல் வயதான பெண்மணி ஒருவரையும் கொன்றுள்ளனர்.

மேயர் மார்க்ஸ்சின்

மேயர் மார்க்ஸ்சின்

இந்த தாக்குதலை சிறிது தூரத்தில் இருந்து லிர்ப்பின் மேயர் மார்க்ஸ்சின் கண்களில் கண்ணீருடன் பார்த்து இருக்கிறார். என் கண்ணுக்கு முன் எம்மக்களை சுட்டனர். இதை என்னால் பார்க்க முடியவில்லை. என் கண்ணுக்கு எதிரே இந்த சம்பவம் நடந்தது. மக்கள் பலியானதை பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ரஷ்ய ராணுவம் பொது மக்களை சுட்டது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த குடும்பத்தின் மரணம் பற்றித்தான் இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் செலன்ஸ்கி மிக கோபமாக பேசினார்.

 உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர்

செலன்ஸ்கி தனது பேட்டியில், அந்த குடும்பம் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவே முயன்றனர். அவர்கள் என்ன தவறு செய்தனர். அவர்களை ஏன் ரஷ்ய ராணுவம் கொல்ல வேண்டும். என்ன கொடுமை இது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி பல குடும்பங்களை அவர்கள் கொன்று உள்ளனர். அவர்களை நான் சும்மா விட மாட்டேன். அவர்கள் யாரையும் விட மாட்டேன்.. you **** உங்களை நான் தேடி வருவேன்.

Recommended Video

    வான் பகுதியை தடை செய்தால் அவ்வளவு தான்.. மேற்கு உலக நாடுகளுக்கு Putin எச்சரிக்கை
    கோபம்

    கோபம்

    இந்த போரில் தவறு செய்த எல்லோரையும் நான் தேடி பிடித்து தண்டனை கொடுப்பேன். அவர்களுக்கு இனி இந்த உலகில் நிம்மதியான இடம் என்று எதுவும் கிடையாது. அவர்களுக்கு கல்லறை மட்டுமே நிம்மதியான இடம். அங்கே அவர்களை அனுப்பாமல் விட மாட்டேன். ரஷ்ய படைகள் செய்தது கொலை .. வெளிப்படையான கொலை. இது போர் கிடையாது என்று செலன்ஸ்கி கோபமாகவும் சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேட்டியில் பேசி உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+