5 நாட்களுக்கான உணவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! கிரீன்லாந்து பிரதமர் கொடுத்த உட்சபட்ச அலர்ட்
நூக்: கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் டிரம்ப் குறியாக இருக்கிறார். என்ன ஆனாலும் இந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்குவதாக தெரியவில்லை. இப்படி இருக்கையில், நிச்சயம் நம் நாட்டின் மீது படையெடுப்பு நடக்கும், எனவே அதிகாரிகள், பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கிரீன்லாந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.
"நம்முடைய நாட்டின் மீது ராணுவ ரீதியிலான படையெடுப்புக்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் அதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனவே, நாம் எல்லாவற்றிற்கும் ரெடியாக இருக்க வேண்டும்" என்று கிரீன்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரீன்லாந்து பிரதமர் சொன்னது என்ன?
கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃபிரெட்ரிக் நீல்சன், "கிரீன்லாந்து நேட்டோவின் ஒரு பகுதியாக இருப்பதால், நிலைமை மோசமானால் உலகம் முழுவதும் அதன் விளைவுகள் ஏற்படும்" என கணித்திருக்கிறார்.
அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தை விற்க டென்மார்க் மறுத்தால், ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டியது உலகத் தலைவர்களால் கண்டிக்கப்பட்டது. இருப்பினும், டிரம்ப் கிரீன்லாந்தை வாங்கும் தனது லட்சியத்தைக் கைவிடவில்லை. தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்குவது சாத்தியமில்லை என்று அவர் கூறியிருந்தார்.
நேட்டோவின் முக்கியத்துவம்
இப்படி இருக்கையில்தான் கிரீன்லாந்து பிரதமரிடமிருந்து வார்னிங் வந்திருக்கிறது. கிரீன்லாந்து எடுக்கும் தயார்நிலை நடவடிக்கைகளுக்கு, சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டு, புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். அதன்படி வீடுகளில் ஐந்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய வீட்டுப் பொருட்களைச் சேமிப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
உண்மை இதுதான்
டென்மார்க்கும், கிரீன்லாந்தும் டிரம்பின் விருப்பத்தை எதிர்த்தாலும், டிரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும், இப்படி ஆக்கிரமிப்பு செய்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த அறிக்கையை ரெடி செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டதாக சில தகல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அவை உண்மையில்லை என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர் என, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
சர்வதேச பதற்றம்
டிரம்ப் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் இந்த தகவல் ஓரளவுக்கு ஆறுதல் கொடுத்தலாலும், கிரீன்லாந்தில் பதற்றம் முழுமையாக குறையவில்லை. கிரீன்லாந்து கடுமையான சிரமத்தில் இருப்பதாகவும்,"நாம் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் நிதியமைச்சர் மூட் பி ஈகேட் கூறியிருக்கிறார். டிரம்பின் படையெடுப்புத் திட்டத்திற்கு எதிராக, நாங்கள் சுதந்திரம் விரும்புகிறோம் என்று கிரீன்லாந்து மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரீன்லாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருப்பதால், அங்கு ஏற்படும் மோதல்கள் உலகப்போராக வெடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே உலக நாடுகள் கடும் அச்சத்தில் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications