குவாடெமாலா விபத்தில் 51 பேர் பலி! சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து!
குவாடெமாலா: மத்திய அமெரிக்க நாடான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகி உள்ளனர். இந்தக் கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்காவை சேர்ந்த நாடு குவாடெமாலா. இந்நிலையில் திங்கட்கிழமை அன்று சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்தில் இருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் ப்ரோக்ரெசோ பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து, சுமார் 65 அடி தூரத்துக்கு உருண்டு உருக்குலைந்து போனது. பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதி, சாலைத் தடுப்பை உடைத்துக்கொண்டு பாலத்திலிருந்து கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் இருந்த 70 பேரில் 51 பயணிகள் பலியாகினர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் விக்டர் கோம்ஸ், தற்காலிக பிணவறையில் 51 உடல்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குவாடெமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ இந்த துயரச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ":இன்று குவாடெமாலாவுக்கு ஒரு கடினமான நாள்" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து பற்றி அந்நாட்டு அமைச்சர் மிகுவல் ஏஞ்சல் டயஸ், "பேருந்து 30 ஆண்டுகள் பழையது என்றாலும், அதற்கு இன்னும் இயக்க உரிமம் இருப்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததுதான் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஜனவரி மாதம், பெரு தலைநகர் லிமாவின் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில், தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் மார்ச் 2015 இல் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 54 பேர் இறந்தனர். அதன் பிறகு நடந்த மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications