கவுதமாலா எரிமலை வெடிப்பு.. பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு.. அதிர்ச்சி வீடியோ
கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்ததில் மொத்தம் இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

கவுதமாலா: கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்ததில் மொத்தம் இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர்.
நேற்று மாலை வரை மொத்தம் 25 பேர்தான் பலியாகி இருந்தனர். ஆனால் நேரமாக நேரமாக பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டி என்ற பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீட்டர்கள் தொலைவில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. மீட்பு பணிகள் தற்போது அங்கு நடந்து வருகிறது.
|
மிகவும் மோசம்
இந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் வரை வானத்தில் பரவியுள்ளது. முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் இப்போது பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்துள்ளது. தொடர்ந்து எரிமலை குழம்புகள் மக்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
|
மாட்டிய மக்கள்
இந்த மோசமான இயற்கை பேரழிவு காரணமாக இதுவரை 300 பேர் காயமடைந்துள்ளனர். 2000 பேர் ஊரை காலி செய்துள்ளனர். 1000 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த மோசான எரிமலை வெடிப்பு குறித்து நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
|
மீட்பு
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க நேற்றில் இருந்து அந்நாட்டு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் எரிமலை குழம்புகளும் புகைகளும் பல இடங்களில் சூழ்ந்து இருப்பதால் மீட்பு பணி தாமதமாகி உள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சிலரும் மரணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
|
உயரும் எண்ணிக்கை
நேற்று மாலை வரை பலி எண்ணிக்கை 25ஆக இருந்தது. ஆனால் தற்போது 69 ஆக உயர்ந்துள்ளது. இதில் நிறைய குழந்தைகள் இருக்கலாம் என்று அச்சம் எழுகிறது. இன்னும் முழுமையான விவரம் வெளியாகாத காரணத்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications