For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஹ்ரைன்-திருச்சிக்கு விமானம் விட கல்ப் ஏர் திட்டம்: வாக்கெடுப்பில் பங்கேற்கலாமே

By Siva
Google Oneindia Tamil News

பஹ்ரைன்: பஹ்ரைனைச் சேர்ந்த கல்ப் ஏர் நிறுவனம் திருச்சிக்கு விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது.

பஹ்ரைனில் உள்ள முஹாரக் நகரை தலைமையிடமாகக் கொண்டு கல்ப் ஏர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பஹ்ரைனில் இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் கல்ப் ஏர் பஹ்ரைனில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. திருச்சிக்கு நேரடி விமானம் விடுவது குறித்து அந்நிறுவனம் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

Gulf Air plans to extend service to Trichy

அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் http://gulfaircampaign.digeelabs.com/ இங்கே கிளிக் செய்யவும். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு திருச்சிக்கு விமானம் விடுமாறு கருத்தை பதிவு செய்யுமாறு பஹ்ரைனில் வசிக்கும் தமிழர்கள் சக தமிழர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருச்சிக்கு செல்லாதவர்களாக இருந்தாலும் அங்கு செல்பவர்களின் நலன் கருதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

English summary
Gulf air is planning to extend its service to Trichy. Tamils working in Bahrain have asked fellow tamils to go to this link and vote http://gulfaircampaign.digeelabs.com/
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X