For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உரிய தகுதி இருந்தும் எச்-1 பி விசா மறுப்பது ஏன்.? இந்தியருக்கு ஆதரவாக அமெரிக்க நிறுவனம் வழக்கு

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தொழில்நுட்ப மையமான சிலிகான் வேலியில் இயங்கி வரும் ஐ.டி நிறுவனம் ஒன்று, அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. தனது தகுதி வாய்ந்த இந்திய ஊழியருக்கு அமெரிக்க அரசு எச்-1 பி விசா வழங்க மறுத்ததற்கு எதிராக இவ்வழக்கை தொடர்ந்துள்ளது.

எக்ஸ்டெரா சொல்யூஷன்ஸ் என்ற அந்த ஐடி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், தங்கள் நிறுவனத்தில் வணிக முறை ஆய்வாளராக பணியமர்த்தப்பட்ட இந்தியரான பிரஹார்ஷ் சந்திராவிற்கு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் எச்-1 பி விசாவை தவறாக மறுத்துள்ளது.

H-1B visa denied to Indian teche .. The company lawsuit against the US government

அவருக்காக பரிந்துரைத்து நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட எச்-1பி விசாவை பரிசீலித்த அரசு, அவருக்கு வழங்கப்பட்ட வேலை எச் 1 பி சிறப்பு விசா பெறுவதற்கு தகுதியுடையதாக இல்லை என கூறியுள்ளது.

தொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்!தொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்!

தங்களது ஊழியருக்கு விசா வழங்க மறுத்த அரசு அதற்குரிய காரணத்தை ஆதாரப்பூர்வமாக வழங்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இச்செயல் சட்டப்பூர்வ முன்மாதிரிக்கு முரண்பாடாக உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்திய ஊழியருக்கு விசா வழங்க மறுத்துள்ள சம்பவம் தன்னிச்சையாக உள்ளது அரசின் இச்செயல் நம்பமுடியாத தெரிந்தே வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ள ஒரு தவறு போலவே உள்ளதாக எக்ஸ்டெரா சொல்யூஷன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே அரசின் முடிவை நிராகரித்து பிரஹார்ஷ் சந்திராவிற்கு எச் 1 பி விசா வழங்க உத்தரவிடுமாறு கலிபோர்னியாவின் வடக்கு மாவட்ட அமெரிக்க நீதிமன்றத்தில் வாதாடியது.

பிரஹார்ஷ் சந்திரா எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார் தவிர டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்தின் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது அவர் தனது மனைவி மூலம் H-4 விசா வைத்துள்ளார் இருப்பினும் அவர் முக்கிய ஐடி நிறுவனம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் தற்போது அவருக்கு எச் 1 பி விசா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
An IT firm operating in Silicon Valley, a technology center in the California province has filed a lawsuit against the US government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X