For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களைகட்டிய ஹஜ் பயணம்.. 2 ஆண்டுக்கு பிறகு அராபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை

Google Oneindia Tamil News

மினா நகர்: கொரோனா பரவல் குறைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹஜ் பயணத்தின் ஒருபகுதியாக அராபத் மலையில் 10 லட்சம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமை ஹஜ் யாத்திரையாகும். இதனால் ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனார்.

இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 7 ம் தேதி ஹஜ் யாத்திரை துவங்கியது.

10 லட்சம் பேர்

10 லட்சம் பேர்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்ததால் ஹஜ் யாத்திரை பாதிக்கப்பட்டது. ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது. இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து 8.50 லட்சம் பேர் உள்பட மொத்தம் 10 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹஜ் பயணம்

ஹஜ் பயணம்


இந்நிலையில் தற்போது ஹஜ் பயணம் துவங்கியது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணிகள் மெக்கா நோக்கி செல்கின்றனர். அவர் மினாநகர், அராபத் மலைக்கு சென்று தொழுகை நடத்துவர். அங்கிருந்து முஸ்டலிபா செல்லும் அவர்கள் கற்களை சேகரித்து "சாத்தான் மீது கல் எறியும் சடங்கை" நிறைவேற்றி மெக்கா திரும்புவர்.

அராபத் மலையில் தொழுகை

அராபத் மலையில் தொழுகை

இந்நிலையில் ஹஜ் பயணம் களைக்கட்டியுள்ளது. இந்த பயணத்தின் ஒருபகுதியாக முஸ்லிம்கள் மினா நகரில் திரண்டு குரான் படித்து அல்லாவுக்கு நன்றி கூறி தொழுகை நடத்தினர். அதன்பிறகு மெக்காவில் இருந்து 22 கிலோமீட்டர், மினாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அராபத் மலை நோக்கி சென்றனர். அங்கு வெள்ளை உடை அணிந்து தொழுகை மேற்கொண்டனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 லட்சம் பேர் இந்த தொழுகையை மேற்கொண்டனர்.

சிறப்பு வசதி

சிறப்பு வசதி

இவர்கள் இங்கிருந்து முஸ்தலிபா சென்று கற்கள் சேகரித்து, ஜமாராத் எனப்படும் சாத்தான் மீது கல் எறியும் சடங்கை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் பயணிகளுக்காக சவுதி அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

English summary
10 Lakhs of Muslims offered prayers on Mount Arafat as part of the Hajj after 2 years when the spread of Corona was reduced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X