ரயில்வேயில் 100% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஏன்?: மோடி விளக்கம்
நமது இந்தியா இன்னமும் பின் தங்கியிருப்பதற்கான எந்த ஒரு காரணமும் இல்லை. இந்தியா நிச்சயம் வலிமையான நாடாக வரும். இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற போது உங்களால் வாக்களிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு நிமிடமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நீங்கள்.
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்காகத்தான் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கினோம். இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. ஆனால் கடந்த 10 வாரங்களில் 7 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கி இருக்கிறோம்.

இந்தியக் குடிமக்களாகிய நாம் நினைத்தால் 'தூய்மை' நாடாக உருவாக்க முடியும். ஏழை மக்கள் தூய்மையின்மையால் நோயால் அவதிப்படுகின்றனர். இதற்காகவே தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கினோம். நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டு 2019. அப்போது நாம் தூய்மையான இந்தியாவை காந்திக்கு அர்ப்பணிப்போம்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே மேக் இன் இந்தியா திட்டத்தைத் தொடங்கினோம். உலக நாடுகளின் ஒட்டுமொத்த முதலீடும் இந்தியாவுக்கு வர வேண்டும்.
இந்தியாவில் ரயில் கூரைகள் மீது ஏறி பயணம் செய்வதை பார்க்க முடியும். இந்த நிலையை மாற்றவே ரயில்வே துறையில் 100% அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளோம். 3 ரயில்வே பல்கலைக் கழகங்களையும் தொடங்கியுள்ளோம்.
இந்தியா இளைஞர்கள் எனும் உழைப்பு சக்தியால் ஆசீர்வதீக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் உழைப்பு சக்தி தேவையாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் நமது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போதைய தேவை ஒரு நல்ல நிர்வாகம்தான்.. அரசுகள் தேவை என்பதை விட நிர்வாகமே தேவை. முந்தைய அரசுகள் சட்டங்களை உருவாக்கி மகிழ்ந்தன. ஆனால் நான் சட்டங்களை கட்டுப்பாடுகளை நீக்கி மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் அமைதியாக சுதந்திரமாக வாழ தூய்மையான காற்று அவசியம் என்பதற்காகத்தான் இதனை செய்கிறோம்.
நீங்கள் இந்தியாவைப் பற்றி என்ன கனவு காண்கிறோர்களோ அதையே நானும் என்னுடைய கனவாகக் கொள்கிறேன்.
ஒரு நாட்டை அரசு உருவாக்கிவிடாது. மக்கள்தான் நாட்டை அரசை உருவாக்குகிறார்கள். இந்திய வம்சாவளி என்பதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் (பி.ஐ.ஓ) வாழ்நாள் கால விசா பெற முடியும்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய கலாசார மையம் செயல்படத் தொடங்கும். ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இறங்கி 'விசா' பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளோம்.
mygov.in என்ற இணையதளம் மூலம் உங்களது குறைகளை ஆலோசனைகளைத் எனக்குத் தெரிவியுங்கள்.
இவ்வறு பிரதமர் மோடி பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications