Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடாவில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில்..ஆளும் கட்சி எம்பி பரபர குற்றச்சாட்டு! ட்ரூடோவிற்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

ஒட்டவா: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்துக்களை குறிவைத்து வெறுப்பு குற்றங்கள் நடப்பதாக கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சியை சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பியுமான சந்திர ஆர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு முன்னெடுத்த போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிடுவது, நாட்டு நலனுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுதல் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

hate crime targeting Hindus in this country in the name of freedom of expression MP slams party leader Trudeau

இந்ந நிலையில், காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம். இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது.

ஆனால் கனடா தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதோடு இந்திய தூதரை வெளியேற்றியது. அதேபோல் இந்தியாவும் கனடா தூதரை வெளியேறியது. மேலும் இந்தியாவில் உள்ள கனடர்கள் பாதுகாப்பாக இருக்க கனடா அறிவுறுத்தியது. அதேபோல் இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியது. இந்த விவகாரங்களால் இந்தியா- கனடா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்று கனடாவில் ட்ரூடோ கட்சியை சேர்ந்த எம்.பியே கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியை சேர்ந்த எம்.பியுமான சந்திர ஆர்யா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் இயக்க தலைவரும் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பண்ணுன் கனடாவில் உள்ள இந்துக்கள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் கூறியதாக சாடியுள்ளார். குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதலால் கனடா-இந்துக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் இந்து -கனடா மக்கள் அமைதியுடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எதாவது இந்துபோபியா சம்பவங்கள் நடைபெற்றால் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+