Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரபர "ரெட்" அலர்ட்.. சவுதியில் விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை.. ஓமன், துபாய்க்கும் கனமழை அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் பெய்த கனமழையால் அங்குப் பல இடங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் எப்போதும் வறண்டே இருக்கும். கிட்டத்தட்ட ஒரு பாலைவனத்தைப் போலத் தான் அங்கு எப்போதும் வானிலை இருக்கும். அங்கு ஓராண்டிற்கு சில செமீ மழை பெய்வதே ரொம்ப அதிசயம்.

Heavy rain and floods hit parts of Saudi Arabia

ஆனால், இந்தாண்டு மத்திய கிழக்கில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட துபாயில் வரலாறு காணாத மழை பெய்தது.. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கிப் போனது.

கொட்டி தீர்த்த கனமழை: இப்போது மீண்டும் மத்திய கிழக்கு பகுதியில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சவுதியில் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இஸ்லாமியர்களின் புனித தலமான மதீனாவில் அல் ஈஸ் கவர்னரேட் என்ற பகுதியில் அதீத மழை பெய்துள்ளது. கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அங்குப் பல பகுதிகளில் சாலைகளிலேயே நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. பல பகுதிகளில் கட்டிடங்களும் கூட சேதமடைந்துள்ளன.

கனமழை தொடர்ந்து கொட்டி வருவதால் மதீனா பிராந்தியத்தில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சவுதி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதீத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நீர் இருக்கும் பகுதிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது..

ரெட் அலர்ட்: மேலும், இடி மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்பதால் மதீனா பகுதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாகச் சவுதி முழுக்க கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சவுதியில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஆசிர், பஹா, மக்கா மற்றும் மதீனா, ஜசான், காசிம், ஜாஃப், ஹைல், தபூக், வடக்கு எல்லைகள், ரியாத் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளில் மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

எச்சரிக்கை: இந்த வாரம் 10 மிமீ முதல் 50 மிமீ வரை மழை பெய்யும் என அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. பல பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல் கஹ்தானி கேட்டுக் கொண்டுள்ளார். அதீத காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதர பகுதிகள்: ஓமன் பகுதியிலும் பலத்த காற்று, ஆலங்கட்டி மழை ஆகியவை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.. இது மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்தின் சில பகுதிகளில் கனமழை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வளைகுடா நாடுகளில் வீசிய தொடர் புயல்களில் ஓமனில் 20 பேரும், எமிரேட்ஸில் 4 பேரும் உயிரிழந்தனர். துபாய் மற்றும் ஷார்ஜாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+