ஜப்பானில் கடும் பனிப்பொழிவு... 169 பேர் காயம் - 200 விமானங்கள் ரத்து.. கரண்ட் இல்லை!
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால், இதுவரை 169 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தரையிலிருந்து முப்பது சென்டிமீட்டர் அளவிற்கு பனி படர்ந்துள்ளது.
இதனால் சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மின் தடை...
பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமானங்கள் ரத்து...
மேலும் பலத்த காற்றும் வீசுவதால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல காலதாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளன.

பெரும் பாதிப்பு...
ஹொக்கைடோ, ஹோகுரிக்கு, டோகாய் ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பனிப்பொழிவு நீடிக்கும்...
இந்த நிலை நீடிக்கும் என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications