அமீரக மருத்துவமனையில் ஏழை தமிழர்: ஊருக்கு அனுப்பி வைக்க உதவுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

ராசல் கைமா: அமீரகத்தில் உள்ள ராசல் கைமா நகரில் இருக்கும் சைப் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த ராஜு ஞானமுத்து (41) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல விருப்பம் உள்ளவர்கள் உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் ராஜு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய ஹோட்டலுக்கு வேலைக்காக வந்தார். திடீரென இவருக்கு வாதம் போல் ஏற்பட்டு இவரது உடலின் இடது புறம் செயல் இழந்துவிட்டது. மேலும் பேசும் சக்தியையும் இழந்துள்ளார்.

Help this sick TN man to go home from UAE

இவரது வருமானத்தின் மூலமே இவரது குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இவரது மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.

ராசல் கைமாவில் பணிபுரிந்து வரும் தமிழகத்த்தை சேர்ந்த டேனியல் என்பவர் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். எனினும் அவரது மருத்துவமனை கட்டணம் 5,000 திர்ஹத்துக்கு மேல் உள்ளது. மேலும் விமானத்தில் கொண்டு செல்ல 8,500 திர்ஹாம் செலவாகிறது. இதற்காக இந்திய துணைத் தூதரகத்தில் உதவிகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Help this sick TN man to go home from UAE

இதுவரை அதற்கான உதவிகள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்குள் ராஜுவின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

உதவிட விரும்பும் நல்லுல்லங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,

டேனியல் : 00971 50 6274997 / 050 51 96 433

ராஜுவின் மனைவி வங்கி கணக்கு விபரம் :

MRS. KUMARI LATHA

A/C NO.: 67044168909

IFSC CODE: SBTR0000289

State Bank of Travancore, Thengapattanam branch,

Marthandam-Thengapattanam Rd, Thengapattanam, Tamil Nadu 629173, India.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+