ஆடிப்போன இஸ்ரேல்.. ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா சரமாரி தாக்குதல்!
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான போர் தற்போது லெபனானுக்கும் விரிவடைந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஹமாஸை அழிப்பதாக கூறி, கடந்த ஓராண்டாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். ஓராண்டுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் போர் பாலஸ்தீனத்தை தொடர்ந்து, லெபனானுக்கும் விரிவடைந்துள்ளது. லெபனான் மீது கையை வைத்தவுடன், ஹிஸ்புல்லா களத்தில் குதித்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகிறது.

நேற்றிரவு இந்த தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. அதாவது, இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அந்நாட்டு ராணுவ தலைமையகத்தின் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு டிஜிபி ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா பயன்படுத்தியிருக்கிறது. தாக்குதலில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
பின்னணி என்ன?: பாலஸ்தீனத்தில் தொடக்கத்தில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க அங்கிருந்து வெளியேறிய யூதர்களுக்கு, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து பாலஸ்தீனத்தில் அடைக்கலம் கொடுத்தது. இதுதான் இப்போது நடக்கும் போருக்கு தொடக்க புள்ளி. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி உடைத்து இஸ்ரேல் என உருவாக்கப்பட்டது.
நாடுதான் கிடைத்துவிட்டதே அத்துடன் அமைதியாக இருக்கலாம் என்று நினைக்காத இஸ்ரேல், தனது எல்லையை விரிவுபடுத்த தொடங்கியது. இதற்கு அமெரிக்காவும் ஆதரவாக இருந்தது. இப்போது பாலஸ்தீனம் முழுவதையும் இஸ்ரேல்தான் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக கொடி பிடிப்பவர்கள் கொல்லப்பட்டார்கள். இது எல்லாம் சேர்ந்து பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்கிற ஆயுதம் தாங்கிய குழுக்களை உருவாக்கியது.
இந்த குழு, இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இக்குழு திடீரென எதிர்பாராத விதமாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இந்த ஏரியாவுல நான்தான் ராஜா.. என் மேலேயே கை வச்சுட்டியா? என இஸ்ரேல் பதிலுக்கு போரை அறிவிக்க, ஓராண்டில் காசா எனும் பாலஸ்தீன நகரத்தை இஸ்ரேல் உரு தெரியமால் அழித்துவிட்டது. ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் உருவாக்கிய ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளே நுழைய, தற்போது ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது.
ஆக.. இந்த போர் முடிய வேண்டும் எனில், இஸ்ரேலின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே முடியும்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications