“இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால் ஏற்போம்.. ஆனால்..” ஹிஸ்புல்லா புதிய தலைவர் நைம் காசிம் உறுதி!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்று வரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த போரால் காசா மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமீபத்தில், ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் கொல்லப்பட்டார். லெபனானையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலை எதிர்த்து வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கொல்லப்பட்டார். அவரை அடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட இருந்த ஹஷெம் சஃபீதினும் அடுத்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லாவின் வழக்கமான நடைமுறைப்படி ஷூரா கவுன்சில் கூடி நைம் காசிமை பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி என்பவரால் 1991 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் நைம் கசிம். அடுத்த சில ஆண்டுகளில் இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் அப்பாஸ் அல்-முசாவி கொல்லப்பட்டார். ஹசன் நஸ்ரல்லா பொதுச் செயலாளர் ஆனபோதும், துணைத் தலைவராக நைம் காசிம் தொடர்ந்தார்.
ஹிஸ்புல்லாவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் அவர் நீண்ட காலமாக இருந்துள்ளார். ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்குப் பிறகு கடந்த 8 ஆம் தேதி அளித்த நேர்காணலில், லெபனானுக்கான போர்நிறுத்த முயற்சிகளை ஹிஸ்புல்லா ஆதரிப்பதாகக் கூறி இருந்தார் நைம் காசிம்.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமான தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட நிலையில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் முடிவுக்கு வரக்கூடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த வேளையில், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மீண்டும் போர் தீவிரமடையக்கூடும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக பேசியுள்ளார் நைம் காசிம். "எங்கள் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவின் பணித் திட்டத்தின் தொடர்ச்சியே எனது வேலையும். அவர் உருவாக்கிய போர்த் திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கிறேன்.
இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளின்படி நடந்தால் மட்டும் தான். போர் நிறுத்தத்திற்காக நாங்கள் கெஞ்ச மாட்டோம்" என நைல் காசிம் கூறியுள்ளார்.
சர்வதேச மத்தியஸ்தர்கள், லெபனான் மற்றும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள சூழலில் ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications