ராஜஸ்தான் கற்கள்.. கங்கை நீர் செயற்கை நதி! அடேங்கப்பா.. அபுதாபி இந்து கோயிலில் என்னென்ன ஸ்பெஷல்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ள சுவாமி நாராயண் கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இக்கோயில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இக்கோயிலை திறந்து வைத்து, பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். இதனை தொடர்ந்து இன்று அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.

கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோயில் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019ம் ஆண்டு கொடுத்தது. இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இக்கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ராஜஸ்தானிலிருந்து சுமார் 7 லட்சம் செங்கற்கள் அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டன.
மொத்தம் 7 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த கோபுரங்கள் அனைத்தும் அபுதாபியின் சிறந்த கட்டிடங்களின் அடையாளமாக திகழ்கிறது. கோயிலின் வளாகத்தில் பார்வையாளர் மையம், பிரார்த்தனை கூடங்கள், தோட்டங்கள், கற்றல் பகுதிகள் போன்றவை உள்ளன. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க 300 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது தவிர கங்கை நீரில் இருந்து உருவாக்கப்பட்ட செயற்கை நதியும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இங்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், கோயிலை குளுமையாக வைத்துக்கொள்ள நானோ டைல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் பெரும்பாலான பகுதிகளை கட்ட இரும்பு அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் உட்புறத்தை பொறுத்த அளவில், ராமாயணம் மற்றும் மகாபாரதம் உட்பட இந்தியாவில் இருந்து 15 கதைகள் தவிர, மாயன், ஆஸ்டெக், எகிப்திய, அரபு, ஐரோப்பிய, சீன மற்றும் ஆப்பிரிக்க நாகரிகங்களின் கதைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை கட்டி முடிக்க சுமார் ரூ.700 கோடி செலவாகியுள்ளது. இவையெல்லாவற்றையும் விட மேலான விஷயம் என்னவெனில், ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்படும் முதல் இந்து கோயில் இதுதான் என்பதாகும். எனவே அயோத்தியை தொடர்ந்து இந்த கோயில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) சார்பில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று இக்கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications