14 நாட்களில் 3 இந்துக்கள் படுகொலை.. வங்கதேசத்தில் சிறுபான்மையினரை வேட்டையாடும் கும்பல்.. அதிர்ச்சி
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்குப் பல்வேறு இடங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகிறது. அங்கு ஏற்கனவே இந்துக்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கு இரண்டு வாரங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இப்போது 3ஆவதாக மற்றொரு இந்து நபரும் கொல்லப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு வன்முறை வெடித்து ஹசீனா ஆட்சியை இழந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கு இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவர் தலைவர் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

வங்கதேசம்
ஏற்கனவே கடந்த இரு வாரங்களில் இரு இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கதேசத்தில் மீண்டும் அப்படியொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. அங்கு மைமன்சிங் மாவட்டத்தில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த செக்யூரிட்டி கொல்லப்பட்டார்.. அவருடன் வேலை செய்து வந்த ஊழியரே சுட்டுக் கொன்றனர்.
பலூக்கா உபசிலா பகுதியில் அமைந்துள்ள லபிப் குழுமத்திற்குச் சொந்தமான சுல்தானா ஸ்வெட்டர்ஸ் தொழிற்சாலையில் இந்த நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குக் கடந்த இரண்டு வாரங்களில் இந்து நபர் கொல்லப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
என்ன நடந்தது!
உயிரிழந்த நபர் 42 வயதான பஜேந்திர பிஸ்வாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை நோமான் மியா (29) என்பவர் சுட்டுக் கொன்றுள்ளார். தொழிற்சாலை வளாகத்தில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, நோமான் மியா தனது துப்பாக்கியை பிஸ்வாஸ் நோக்கிக் காட்டியுள்ளார். அப்போது அது எதிர்பாராதவிதமாக வெடித்ததாகக் கூறப்படுகிறது.. துப்பாக்கிக் குண்டு இடது தொடையில் பாய்ந்ததில், பிஸ்வாஸ் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார்.
அன்சார் தொழிற்சாலை
அங்குள்ள அன்சார் என்ற தொழிற்சாலையில் வேலை செய்யும்போது இந்தக் கொடூரம் நடந்துள்ளது. அன்சார் என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சீருடை துணைப் படையாகும். அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் இவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்படும். அதுதான் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நோமான் மியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. உயிரிழந்தவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மைமன்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
விசாரணை
நோமான் மியாவிடமும் விசாரணை நடந்து வருகிறது. நிஜமாகவே ஜோக் செய்யும்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததா.. இல்லை திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றுவிட்டு, இதுபோல நாடகமாடுகிறாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது.
கடந்த டிசம்பர் 18ம் தேதி பலூக்காவில் தீபு சந்திர தாஸ் என்பவரை உடன் வேலை செய்தவர்களே அடித்து கொன்றனர். அவரை மரத்தில் கட்டி வைத்துத் தீயிட்டும் கொளுத்தினர். அவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, மைமன்சிங்கிற்கு வெளியே மற்றொரு இந்து நபர் அடித்துக்கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications