போர்டு ஆரம்பித்து வைத்த ஷட்டவுன்...!
வாஷிங்டன்: 1976ம் ஆண்டுதான் அமெரிக்க வரலாற்றில் முதலாவது அரசு இயந்திர மூடல் நடந்தது. அப்போதைய அதிபர் ஜெரால்ட் போர்டு கொண்டு வந்த அந்த ஷட்டவுன் நடவடிக்கை பத்து நாட்கள் நீடித்தது.
அமெரிக்காவை ஷட் டவுனால் முடக்கிப் போட்டுள்ளார் அதிபர் ஒபாமா. இது பல்வேறு சர்ச்சைகளையும், சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதற்கு முன்பு பலமுறை ஷட்டவுன் நடவடிக்கையை அமெரிக்க அதிபர்கள் மேற்கொண்டுள்ளனர்.

1976ல் முதல் முறை
1976ம் ஆண்டு முதல் முறையாக ஷட்டவுன் நடவடிக்கையை அமெரிக்கா கண்டது. அப்போதைய அதிபர் போர்டு, அமல்படுத்திய ஷட்டவுன் 10 நாட்கள் நீடித்தது. செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த ஷட்டவுனை அறிவித்தார் போர்டு.

1977ல் 3 முறை
1977ம் ஆண்டு மொத்தம் 3 முறை ஷட்டவுனை கண்டது அமெரிக்கா. அப்போது அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். 1978, 1979ம் ஆண்டும் கார்ட்டர், ஷட்டவுனை அறிமுகப்படுத்தினார்.

ஓவராக பயன்படுத்திய ரீகன்
ரொனால்ட் ரீகன்தான் அமெரிக்க வரலாற்றில் ஷட்டவுனை அதிக அளவில் பயன்படுத்திய அதிபர் ஆவார். அதாவது 8 முறை இவர் அரசு இயந்திரத்தை முடக்கியுள்ளார்.

கிளிண்டன் 2 முறை
கிளிண்டன்அதிபராக இருந்தபோது 2 முறை ஷட்டவுனை அமல்படுத்தியுள்ளார். அவரது அதிரடி நடவடிக்கையால் குடியரசுக் கட்சியினரும் இறங்கி வந்தனர் என்பதால் கிளிண்டன் அறிமுகப்படுத்திய ஷட்டவுனுக்கு அப்போது அமெரிக்கர்களிடையே நல்ல ஆதரவு கிடைத்தது.












Click it and Unblock the Notifications