இந்தியாவின் எந்த பகுதியையும் எந்த நேரத்திலும் தாக்குவோம்... மிரட்டும் 'ஹிஸ்புல்' சலாவுதீன்
எங்களின் முழுநேர இலக்கு இந்தியா தான் என்று ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவூதீன் பகிரங்கமாகக் கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர்: இந்தியா மட்டுமே எங்களது முழுநேர இலக்கு என்று ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவூதீன் பகிரங்கமாகக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பின் தலைவரான சையத் சலாவூதீனை சர்வதேச தீவிரவாதியாக, அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது.

இதையடுத்து, அவரையும், அவரின் இயக்கப் பணிகளையும் முடக்கும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த சலாவூதீன், "இந்தியாவில் நீண்ட காலமாக, பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வந்துள்ளோம். இந்தியாவில் இனிவரும் நாட்களிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவோம். இந்தியாவே எங்களது முழுநேர இலக்கு,'' எனக் கூறியுள்ளார்.
மேலும், காஷ்மீர் எங்களது தாய்வீடு என்றும், காஷ்மீர் மட்டுமின்றி, இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆதரவைப் பெற்றுள்ளதால், அந்நாட்டின் எந்த பகுதியையும் தாக்க, எங்களால் முடியும் என்றும், சலாவூதீன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சர்வதேச சந்தைகளில் இருந்து, ஆயுதங்களை வாங்கியே, தங்களது தீவிரவாத இயக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த பேட்டியில் சலாவூதின் தெரிவித்துள்ளார். இது இந்தியா மட்டுமின்றி, சர்வதேச நாடுகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications