HMPV வைரஸ் பாதிப்பு.. சீனாவில் உண்மையில் என்ன நடக்குது? நேரில் பார்த்த கேரள மருத்துவர் விளக்கம்
பீஜிங்: சீனாவில் HMPV வைரஸ் தீவிரமாக பரவுவதாகவும், இதனால் அங்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. மேலும் மருத்துவமனைகள் எல்லாம், நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் தகன கூடங்களில் சடலங்கள் குவிந்து வருவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இது உண்மையில்லை என்று சீனாவில் வசித்து வரும் கேரள மருத்துவர் ஒன்இந்தியாவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சீனாவில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. சீனாவில் அவசர நிலை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள். சீனாவில் தகன கூடங்கள் நிரம்பி வழிவதாக வெளியான தகவல்களை கேள்வி பட முடிந்தது. அதில் உண்மையில்லை என்று சீனாவில் வசித்து வரும் இந்தியர்கள் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

HMPV வைரஸ் பரவல்
சீனாவில் HMPV (ஹியூமன் மிடாநிமோவைரஸ்) என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த வகை வைரஸ் குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. HMPV வைரஸ் பரவலால் மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் தகன கூடங்களில் சடலங்களை எரியூட்ட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.
ஆனால் சீனாவில் உண்மையான நிலை என்ன என்பது பற்றி அங்கு வசிக்கும் கேரளாவை சேர்ந்த மருத்துவர் பைசல் மற்றும் தொழிலதிபர் பாசில் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எந்த பிரச்சினையும் இல்லை
சீனாவில் நிலமை மோசமாக இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. சீனாவில் அவசர நிலை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள். அவசர நிலை அறிவிக்கப்பட்டால் சீனாவில் இப்படி சூழல் இருக்காது. புஜியான் நகரில் உள்ள மருத்துவமனையில் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லை. HMPV வைரஸ் பாதிப்புக்கு இயல்பாகவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தடுப்பூசி இல்லை
தகன கூடங்கள் நிரம்பி வழிவதாக வெளியான தகவல்களை கேள்வி பட முடிந்தது. அதில் உண்மையில்லை. HMPV வைரஸ் பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் இது வைரஸ் என்பதால் நாளை எப்படி பரவும் என்பதை சொல்ல முடியாது. தற்போது இந்த வைரஸ்க்கு தடுப்பூசி இல்லை. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாஸ்க் அணிவது, சானிடைசர்கள் பயன்படுத்துவது பிசிஆர் பரிசோதனை எல்லாம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்தான்.
அது கூட தனி நபர் விருப்பமாகத்தான் உள்ளது. அரசு கட்டாயம் ஆக்கவில்லை. சளி பாதிப்பினால் வந்தவர்கள் கூட HMPV பாதிப்பு ஏற்பட்டவர்களாக கருதுகிறார்கள். அதுதான் பிரச்சினை. சீனாவுக்கு வெளியில் விவாதிப்பதை போல நாட்டிற்குள் HMPV பற்றி யாருமே பேசுவது இல்லை. இப்படி ஒரு வைரஸ் இருக்கிறது என்பதை மட்டுமே மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தியாவில் 8 பேருக்கு பாதிப்பு
சீனாவில் பரவிய HMPV வைரஸ் தற்போது இந்தியாவுக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஒரு குழந்தைக்கும், கர்நாடகாவின் பெங்களூரில் 2 குழந்தைக்கும், சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கும், கொல்கத்தாவில் 3 பேருக்கும் என மொத்தம் 8 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உருமாறிய HMPV வைரஸ் இல்லை என்றும், எப்போதும் போல பரவும் வைரஸ் காய்ச்சல் தான் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications