தவறான சிகிச்சையால் தாடை இழந்த பெண்: ஆபரேஷன் மூலம் சீரமைப்பு

Subscribe to Oneindia Tamil

கெண்ட்டக்கி, அமெரிக்கா: புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக கூறி தவறான சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் தாடை ஆபரேசன் மூலம் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

கஜகஸ்தான் நாட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு நோய் குறியியல் தொடர்பான சோதனையில் முகத்தின் தாடைப் பகுதியில் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அவருக்கு ‘கீமோ தெரபி' என்னும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நோயினால் சிதையுண்ட பகுதியில் மேலும் புற்று பரவாமல் தடுத்து, புற்றினை அழிக்கும் வீரியம் மிக்க இந்த ‘கீமோ தெரபி' சிகிச்சை மூலம் நோயை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், இந்த சிகிச்சையை எதிர்கொண்ட லெஸ்யா கொடெலெவ்ஸ்கயா (30) என்ற பெண்ணுக்கு புற்று நோயின் தாக்கமே இல்லாத நிலையில் தவறான நோய் குறியியல் சோதனை முடிவை அடிப்படையாக வைத்து ‘கீமோ தெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால், கதிர்வீச்சின் வீரியத்தில் அவரது வலதுபுற தாடை எலும்பு சிதைந்து போய், முகம் சிதைந்து, அழகை இழந்து, வலியில் பெரும் வேதனைப்பட்டார்.

வெளியே சென்று தனது தொழிலை கவனிக்க முடியாத நிலையில் பெரும் இழப்பை சந்தித்த அவரை கணவரும் ஒதுக்கித் தள்ளி விட, கார் கழுவும் ஒரு கடையின் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் அனாதை போல் வாழ வாழ்ந்து வந்தார்.

அவரது நிலைமையை அறிந்த சகோதரர், கெண்ட்டகிக்கு சிகிச்சைக்காக லெஸ்யா கொடெலெவ்ஸ்கயா-வை அழைத்து வந்தார்.

அங்குள்ள லூயிஸ்வில்லெ மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு சுமார் 16 மணி நேரம் நீடித்த சிக்கலான ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி, சிதைந்த தாடை எலும்பை மீண்டும் சீரமைத்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+