வானத்துக்கு மேல யாருப்பா தம் அடிச்சு "ரிங்" விட்டது....??
சார்டாண்டி, கஜகஸ்தான்: கஜகஸ்தானில் வானில் தென்பட்ட பெரிய கருப்பு வளையம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவ காட்சி யூடியூபில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
மர்மான முறையில் இந்த கருப்பு வளையம் வானில் தென்பட்டது. சார்டாண்டி என்ற கிராமத்துக்கு மேலே வானில் தெரிந்த இந்த கருப்பு வளையத்தை கிராமத்து மக்கள் பீதி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கும் மேலாக இது அசையாமல் அப்படியே காணப்பட்டது. இது வேற்று கிரக வாசிகளின் கைவரிசையா என்று பலரும் குழம்பிய நிலையில் அருகாமையில் உள்ள பேக்டரியிலிருந்த வெளியான புகையால் இந்த வளையம் ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பூமியிலிருந்து 100 மீட்டர் உயரத்தில் இந்த கருப்பு வளையம் தென்பட்டது. கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிலிருந்து 40 மைல் தொலைவில் இந்த கிராமம் உள்ளது. கால் மணி நேரம் தென்பட்ட இந்த வளையம் பின்னர் மறைந்து விட்டது.
இந்த வீடியோவை இதுவரை 50,000க்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளனர். இதுகுறித்து சார்டாண்டி கிராமவாசியான ஓலேக் மென்ஷிகோவ் கூறுகையில் பெரிய கருப்பு வளையமாக அது இருந்தது. மாலை 4 மணியளவில் இந்த கருப்பு வளையம் தென்பட்டது. பின்னர் அது காணாமல் போய் விட்டது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications