தலையில் "ஓட்டை".. பானைக்குள்ளே எட்டிப்பார்த்த போலீஸ்.. திருதிருன்னு விழித்த "மாமியார்".. பரிதாப அழகி
மாடல் அழகியை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார் மாமியார்
ஹாங்காங்: கொலைகளை செய்தால், அந்த சடலங்களை இப்போதெல்லாம் சுடுகாட்டில் புதைப்பது கிடையாது போலும்.. நேராக சடலத்தை கொண்டுவந்து ஃப்ரிட்ஜில்தான் வைத்துவிடுகிறார்கள் கொடூரர்கள்.. இந்த சடலங்களின் உறுப்புகளை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு மிகுந்த சவாலாக இருந்து வருகின்றன.
ஃப்ரிட்ஜை திறந்தாலே சடலங்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் இருப்பது சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.. இந்தியா முதல் வெளிநாடுகள் வரை இப்படியான பயங்கரங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில், கடந்த சில தினங்களாக பகீரை கிளப்பி கொண்டுள்ளது ஹாங்கா மாடல் அழகியின் கொலையாகும்.. அந்த பெண்ணின் பெயர் அபி சோய்.. 28 வயதாகிறது..

ஃபாலோயர்ஸ்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற மாடல் அழகி ஆவார். இவர் சோஷியல் மீடியாவில் பிரபலமானவர்.. இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 1 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்களாம். "வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் அனுபவித்து வருகிறேன்" என்று இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டு வைத்திருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.. ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.. ஆனாலும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார்... இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த அழகி காணாமல் போய்விட்டார்.. இதனால், போலீசார் அவரை தேடி வந்தனர்..

உதிர்ந்த உறுப்பு
4 நாட்களுக்கு முன்புதான், தாய் போ மாவட்டத்தில் உள்ள இந்த பெண்ணின் மாமியார் வீட்டில் சில உடல்பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் உடல்பாகங்களை சேகரித்து ஆராய்ந்தனர்.. அவை எல்லாம் காணாமல் போன அழகியின் உடல்பாகங்கள் என்பது உறுதியானது.. ஆனால், நிறைய உடல்பாகங்களை காணவில்லை.. அதனால், சந்தேகமடைந்த போலீசார், அந்த வீட்டுக்குள் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போதுதான், அழகியின் 2 கால்களும் பிரிட்ஜில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. ஃபிரிட்ஜை திறந்தால்தான், கால், கை விரல் என உடல் உறுப்புகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்ததாம்..

2 கால்கள் + தலை
ப்ரிட்ஜில் 2 கால்கள் இருந்த நிலையில், மேலும் கிச்சனில் சோதனை நடந்துள்ளது.. அப்போது, ஒரு கிண்ணத்தில் கை விரல்கள் மிதந்து கிடந்ததாம்.. இது அந்த மாமியார் செய்த காரியம் என்கிறார்கள்.. அவரையும் கைது செய்துள்ளனர்.. ஆக, மாமனார், மாமியார், மைத்துனர், கணவர் என 4 பேரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் ஹாங்காங் முழுவதும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தலை, உடல், கைகள் கிடைக்கவில்லை.. சொத்து தகராறுக்காகவே இந்த கொலை நடந்துள்ள நிலையில், மிச்ச உடல்பாகங்களை தேடும் பணிகள் துரிதமாகின..

மாமியார்
தற்போது, அந்த மாடல் அழகியின் தலை கிடைத்துவிட்டதாம்.. அதே வீட்டில் மாமியார் ஒருநாள் சூப் வைத்திருக்கிறார்.. அந்த சூப் பானைக்குள் இந்த பெண்ணின் தலை இருந்திருக்கிறது.. பெரிய பானையின் உள்ளே தலையை போட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள். போலீசார் தலையை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மற்ற உடல் பாகங்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைதான 4 பேரிடமும் மீண்டும் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. சம்பவத்தன்று, மாடல் அழகியை காருக்குள் வைத்து இவர்கள் தாக்கினாராம்.. இதில், அந்த பெண் காரிலேயே மயங்கி விழுந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் வீட்டுக்குள் கொண்டுவந்து அவரை துண்டு துண்டாக கொன்றதாகவும், ஒவ்வொரு உடல் உறுப்பையும், வீட்டிற்குள்ளேயே ஒவ்வொரு இடங்களில் மறைத்து வைத்தோம் என்றும் வாக்குமூலம் தந்துள்ளனர்..

பானை தலை
தலையில் 'தோலோ சதையோ இல்லை' மற்றும் அவளது மண்டை ஓடு மட்டுமே இருக்கும் வரை வேகவைக்கப்பட்டது என்று எஸ்பி ஆலன் சுங்கை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் லண்டன் தெரிவித்துள்ளது.. அதுமட்டுமல்ல, தடயவியல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டின் பின்புறத்தில் இருந்த ஒரு துளை, ஒரு அபாயகரமான தாக்குதலுக்கான சான்றாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறதாம். மேலும், மாடல் அழகியின் மீத உடல் உறுப்புகளை சாக்கடைகள் மற்றும் குப்பைத்தொட்டிகளில் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்களாம்.. மாடல் அழகியிடமிருந்து கோடிக்கணக்கான சொத்துக்களை பறிப்பதற்காக, அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அந்த நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications