ஹாங்காங்கை நிலைகுலைய வைத்த தீவிபத்து! உடல் கருகி உயிரிழந்த 55 பேர்! 279 பேர் மாயமானதால் அதிர்ச்சி!
ஹாங்காங்: ஹாங்காங் டாய் போ பகுதியில் அமைந்துள்ள வாங் பக் கோர்ட் என்ற மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்து உள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹாங்காங்கின் டாப் போ பகுதியில், 31 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில், மொத்தமாக 2,000-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த வளாகத்தில் சுமார் 5,000 பேர் வசித்து வந்தனர். அங்கு கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், கட்டிடங்கள் மூங்கில் சாரம், பச்சை தார்பாலின் போன்ற பொருட்களால் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பிற்பகல் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, பராமரிப்புக்காக கட்டப்பட்டிருந்த மூங்கில் சாரம், தார்பாலின் பகுதிகளை வேகமாக ஆக்கிரமித்தது.

இதனால் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ, சில நிமிடங்களில் மற்ற ஏழு கட்டிடங்களுக்கும் பரவி விட்டது. இந்த தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 31 மாடிக் கட்டிடங்கள் ஒரே நேரத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த காட்சி உள்ளூர் மக்களையும், மீட்பு படையினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. தொடர்ந்து சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 128 தீயணைப்பு லாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர 20 மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்தனர்.
இதேசமயம், 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு மக்கள் வெளியேற உதவினர். 100-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன. 55ஆக உயர்ந்து உள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தீவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை இத்தனை பெரிய முயற்சிகளுக்குப் பிறகும், பல குடும்பங்கள் இன்னும் தங்கள் உறவினர்களைத் தேடி தவிக்கின்றன. மொத்தம் 279 பேர் இதுவரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிபத்தில் சிக்கிய பகுதிகளில் புகை மற்றும் விழுந்த கட்டிடப் பகுதிகள் காரணமாக மீட்பு வீரர்கள் தேடுதல் பணியை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பெரும் விபத்து குறித்து ஹாங்காங் அரசு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தீ எவ்வாறு எரிந்து இவ்வளவு விரைவாக பரவியது? பராமரிப்பு பணிகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டதா? மூங்கில் சாரம் மற்றும் தார்பாலின் பயன்படுத்துவதில் தவறுகள் இருந்ததா? போன்ற கோணங்களில் உள்ளூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
1997-ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்ட ஹாங்காங், தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்பு தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. மொத்தம் 263 தீவுகளைக் கொண்ட இந்த பிராந்தியத்தில் டாய் போ மாவட்டம் முக்கியமான குடியிருப்பு பகுதி என்பதால், இந்த விபத்து அங்குள்ள மக்கள் மட்டுமன்றி ஹாங்காங் முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications