வயசு 21தான்.. தினமும் 21 மணி நேரம் தூக்கம்.. குறைந்த உடல் எடை.. சிறுநீரக கல்லால் சிதறிய இளம்பெண்!
டான்காஸ்டர்: சிறுநீரக கற்களின் பாதிப்புகளால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 21 வயது பெண் ஒருவர் தினந்தோறும் 21 மணி நேரத்தை தூங்கியே கழிப்பதாகவும் அவரது உடல் எடை மிகவும் மெலிந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்தவர் எம்மா டக் (21). இவருக்கு தனது 18 வயதிலேயே இரு சிறுநீரகங்களிலும் கற்களால் பாதிக்கப்பட்டார்.
இதனால் தனது அன்றாட பணிகளை கூட அவரால் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரது அன்றாட பணிகளையும் சரி வர செய்ய முடியவில்லை. எம்மா டக் தினந்தோறும் 600 கலோரிகள் கொண்ட உணவையே எடுத்துக் கொள்கிறார்.

21 மணி நேரம்
இதனால் சோர்வடைந்து அவர் 21 மணி நேரம் தூங்கிக் கொண்டு படுக்கையிலேயே இருக்கிறார். 18 வயதுக்கு முன்பு வரை எம்மா டக் நன்றாகத்தான் இருந்தாராம். இவர் லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் பயின்று வந்துள்ளார்.

அடிவயிறு
இந்த சூழலில்தான் ஒரு நாள் அடி வயிற்றில் வலி ஏற்பட்டது. இது சிறுநீரக கற்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவரிடம் சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்களோ எம்மா டக் இளம் வயது பெண் என்பதால் அவருக்கு சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.

எம்மா டக்
எனினும் ஸ்கேன் செய்து பார்த்த போது எம்மா டக்கிற்கு சிறுநீரக கற்கள் இருப்பது உறுதியானது. இந்த நிலையில் ஒரு பக்கத்தில் உள்ள சிறுநீரக கற்கள் வெளியேற்றப்பட்ட போது இன்னொன்று அவரது சிறுநீரகத்தில் சிக்கியது. இதன் பின்னர் குழாய் மூலம் அந்த இன்னொரு கல்லும் அப்புறப்படுத்தப்பட்டது.

வயிற்றில் பிரச்சினை
அந்த குழாயானது சில வார காலம் அவருக்குள் இருந்துள்ளது. பின்னர் எம்மாவுக்கு உண்மையான அவஸ்தை ஏற்பட்டது. எம்மாவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததன் காரணமாக அவரது வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரால் சரி வர எந்த உணவையும் உட்கொள்ள முடியவில்லை.

34 கிலோ குறைவு
இதையடுத்து அவர் உடல் எடை 34 கிலோவாக குறைந்துவிட்டது. இதையடுத்து அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எம்மாவுக்கு கேஸ்ட்ரிக் பேஸ்மேக்கர் கருவியை பொருத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு 30 ஆயிரம் பவுண்டுகள் பணம் தேவைப்படுமாம்.

உரிய சிகிச்சை
மேலும் லண்டனுக்கு சென்றால் மட்டுமே உரியச் சிகிச்சை கிடைக்கும். ஆனால் சோகம் என்னவென்றால் எம்மாவால் படுக்கையை விட்டுக் கூட எழ முடியவில்லை. அவருக்கு நிதியை திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications