தென்கொரியா: மருத்துவமனையில் தீ விபத்து, 33 பேர் பலி
தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மிர்யங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் வயோதிகர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேஜாங் என்ற மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் தீப்பற்ற தொடங்கி மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது.
- விளையாட்டில் இணையும் வடகொரிய - தென்கொரிய அணிகள்
- 18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்
அந்த நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனை கட்டடத்திற்குள்ளும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையிலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 11 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ அவசர அறையிலிருந்து பற்ற தொடங்கியிருக்கலாம் என்று கருதுவதாக தீயணைப்புத் துறையின் தலைவரான சோய் மேன்-வூ கூறியுள்ளார்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை என்று அவர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர்கள் சேஜாங் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையையும் சேர்ந்தவர்களாவர். அதில் சிலர் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்" என்று அந்த அதிகாரி கூறியதாக ஏஎஃப்பி செய்தி முகமையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது
- தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?' சங்கரமடம் கேள்வி
- பிரசவ அறையில் இடம் மாறிய குழந்தைகள், இரு தாய்களின் பாசப் போராட்டம்
- இந்தியத் தேர்தல் முறை மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறதா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications