"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா
இஸ்லாமாபாத்: வளைகுடா விவகாரம் தொடர்பாகச் சர்வதேச அரசியலில் ஒரு பெரிய ராஜதந்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தானில் இப்போது ஒரு விஷயம் விவாதமாக வெடித்துள்ளது. அது அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பானது இல்லை... மாறாக அந்தப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலின் பில்லை யார் கட்டுவார்கள் என்பதே இப்போது பஞ்சாயத்தாக வெடித்துள்ளது.
வளைகுடா விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாகப் போர் தொடர்ந்து நடந்து வந்தது. தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. பாகிஸ்தானில் நடந்த அந்த அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நட்சத்திர ஹோட்டல்
கடந்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலான செரீனாவில் நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த நிகழ்வில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பிற்கும் இடையே அணு ஆயுத செறிவூட்டல் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. அதாவது பேச்சுவார்த்தைக்கான ஹோட்டல் செலவுகளைப் பாகிஸ்தான் அரசு இன்னும் செட்டில் செய்யவில்லையாம்.. இதனால் ஹோட்டல் நிர்வாகம் அதிர்ச்சியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பில்
இது பல்வேறு விமர்சனங்களைக் கிளம்பியுள்ளது. முதலில் பாகிஸ்தானால் சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தையே கூட முறையாக நடந்த முடியவில்லை. அதற்கான பில்லை கொடுக்கக் கூட முடியவில்லை என்பது பாகிஸ்தானுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. மேலும், இது பாகிஸ்தான் பொருளாதாரம் எந்தளவுக்குச் சிக்கலாக இருக்கிறது என்பதையும் கூட காட்டுவதாகவே உள்ளது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் சமாளித்துள்ளது. ஹோட்டலின் உரிமையாளர்களே அந்த செலவை ஏற்க முன்வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தச் சர்ச்சை பாகிஸ்தானின் மானத்தைக் கப்பலேற்றத் தொடங்கியதும், ஹோட்டல் நிர்வாகம் ஒரு விளக்கத்தைக் கொடுத்தது. அதில் அவர்கள், "உலக அமைதிக்காக நடக்கும் இந்த முயற்சிக்கு எங்களது பங்களிப்பாக, பிரதிநிதிகளின் தங்குமிட வசதிகளை நாங்கள் இலவசமாக வழங்கினோம்" எனத் தெரிவித்தது. ஆனால், உண்மையில் நிதி நெருக்கடியால் தான் பாகிஸ்தான் அரசு கைவிரித்ததா என்கிற கேள்வி இன்னும் மிச்சமிருக்கிறது.
பாகிஸ்தான் பொருளாதாரம் நெட்டிசன்கள்
பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான நிலையில் இருக்கிறது. வளைகுடா போரால் கச்சா எண்ணெய் விலை எகிறியுள்ள நிலையில், பாகிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. இந்த நேரத்தில் அமீரகமும் பாகிஸ்தானில் இருந்து கொடுத்த கடனை திரும்பக் கேட்கிறது. இதனால் ஐஎம்எஃப் (IMF) கடனுக்காகப் பாகிஸ்தான் கையேந்தி வருகிறது.. இந்த நேரத்தில் இந்த 'பில்' விவகாரம் பாகிஸ்தானுக்குப் பெருத்த அவமானமாகவே இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இந்தப் 'பில்' மேட்டர் வைரலாகி, பாகிஸ்தானை நெட்டிசன்கள் வச்சுச் செய்து வருகின்றனர்.
நெட்டிசன்கள்
"அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் டீல் பேசுறது இருக்கட்டும்... முதல்ல ஹோட்டல் பில்லுக்கு ஒரு டீல் பேசுங்கப்பா!" எனக் கிண்டலடித்து வருகின்றனர். "இந்த பில்லையும் ஐஎம்எஃப் கடனுலதான் செட்டில் பண்ணுவீங்களோ?" எனப் பலர் பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் கேலி செய்து வருகின்றனர். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், இந்த வார இறுதியில் மீண்டும் ஒருமுறை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தில் சந்திக்க உள்ளனர். இந்த முறையாவது பில் யார் தலையில் விழும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
-
இஸ்ரேல் ஈரானை அடிச்சா..இந்தியாவுக்கு வலிக்கும்! சாப்பாட்டுக்கே அல்லாடப் போகும் 25 லட்சம் இந்தியர்கள்! -
ஈரானுக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்த ரஷ்ய அதிபர் புடின்.. அரண்டுபோன டிரம்ப் 'இது மட்டும் நடக்க கூடாது' -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்! -
டிரம்ப்-ஐ கலாய்க்கும் ஈரான் தலைவர்.. அமெரிக்க மக்களை வெறுப்பேத்திய போட்டோ.. என்ஜாய் பண்ணுங்க! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
10 நாள் தான் டைம்.. உலகமே ஸ்தம்பிக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த போராசிரியர்! -
ஈரான் மேட்டரில் நட்டாற்றில் விடப்பட்ட டிரம்ப்.. கழன்று கொண்ட பிரிட்டன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே!












Click it and Unblock the Notifications