சும்மா விட மாட்டோம்! அமெரிக்க கப்பல்களை தாக்க ரெடியாகும் ஹவுதி கிளர்ச்சி! செங்கடலில் எகிறும் டென்ஷன்
தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் செங்கடலில் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு நேற்று எச்சரித்த நிலையில், அமெரிக்கா, ஈரான் மீது துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், செங்கடலில் அமெரிக்க கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாக உச்ச கட்ட பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் பல அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தின. இருப்பினும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்தே வந்தது. இருநாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஈரான் மீது நேரடியாக அமெரிக்காவே தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய இரண்டு வாரங்கள் ஆகும் என்ற ரீதியில் டிரம்ப் பேசியிருந்தார்.
ஆனால் திடீரென ஈரானின் மூன்று அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் வெடிகுண்டு எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் குண்டுகளை வீசியுள்ளன. இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தங்களது பணிகளை ஒருபோதும் பாதிக்காது என்றே ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்தியிருக்க கூடிய இந்த தகவல் உலக அளவில் அதிர வைத்துள்ளது.
சும்மா விடமாட்டோம்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் ஈரான் மீது கடுமையான பதிலடியை சந்திக்க வேண்டியிருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதலை அந்த நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, செங்கடலில் அமெரிக்க கப்பல்களை சும்மா விடமாட்டோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இதனால், தற்போது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் கப்பல்கள் செங்கடலுக்கு வந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் அமெரிக்க கப்பல்களை செங்கடலில் குறிவைத்து தாக்குவோம்.
கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
இஸ்ரேலிய எதிரிகளுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டால், அமைதியாக இருக்க முடியாது" என்று தெரிவித்து இருந்தார். எனவே தற்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதால் அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது.
ஆசிய கண்டத்தில் இருந்து ஒரு கப்பல் ஐரோப்பா செல்வதற்கு முக்கிய கடல் வழித்தடமாக இருக்கும் செங்கடல் பகுதியில் போக்குவரத்து முடங்கினால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் ஏற்படும். அதாவது, ஆசியாவில் இருந்து ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுக்ளுக்கு ஒரு வணிக கப்பல் செங்கடல் வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல வேண்டும் என்றால் ஆப்பிரிக்க நாடுகளை சுற்றி பயணிக்க வேண்டும். இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications