திருநம்பிக்கும் திருநங்கைக்கும் இயற்கையான முறையில் பிறந்த குழந்தை.. இது எப்படி சாத்தியம்?
கொலம்பியா: கொலம்பியாவில் திருநங்கைக்கும் திருநம்பிக்கும் குழந்தை பிறந்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
டான்னா சுல்தானா ஒரு கொலம்பியா மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு பெண்ணாக மாறியுள்ளார். அவர் ஒரு திருநங்கை.
அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு திருநம்பி ஆவார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டனர்.

இயற்கையான முறை
மேலும் இயற்கையான முறையில் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் ஆவதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளவே இல்லை என்கிறார்கள்.

கர்ப்பம்
இதையடுத்துதான் அவர் கர்ப்பமானார். தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை மனைவி சுல்தானா இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். பொதுவாக மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போது வயிறு பெரிதாக இருந்தால் கணவன்மார்கள், அந்த வயிற்றில் குழந்தைக்கு முத்தமிடுவார்கள்.

முத்தமிட்ட காட்சிகள்
அது போல் இங்கு சுல்தானா அவரது கணவரின் வயிற்றில் முத்தமிட்ட காட்சிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சுல்தானாவின் கணவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அது போல் மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என குழப்பத்தில் உள்ளனர்.

இயற்கையான பிறப்புறுப்புகள்
எனினும் சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும் இயற்கையான பிறப்புறுப்புகள் இருப்பதால் இவர்களுக்கு குழந்தை இயற்கையாக கருத்தரித்து பிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த குழநதைக்கு ஏரியல் என பெயர் சூட்டியுள்ளனர். இவர்களையும் இவர்களது குழந்தையையும் நெட்டிசன்கள் பாராட்டி வாழ்த்தி வந்தனர்.

இது முதல்முறையல்ல
இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரேகானில் ஒரு பெண்ணாக பிறந்து பின்னர் ஆணாக மாறிய ஒருவர் இதே போன்று குழந்தை பெற்றெடுத்தார். டிரைஸ்டன் ரீஸ் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர் ஹார்மோன் தெரபி மேற்கொண்டு ஆணாக மாறிவிட்டாலும் அவருடைய அந்தரங்க உறுப்புகளை மாற்றாமல் அப்படியே வைத்திருந்தார். அவருக்கு ஏற்கெனவே ஒரு முறை கருச்சிதைவு நடந்து பின்னர் கரு உருவாகி குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications