Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யோசிக்க கூட முடியாது.. ஈரான் மீது கொடூரமாக தாக்கிய இஸ்ரேல்.. ‛மொசாட்’ போட்ட ஸ்கெட்சை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்திய இன்றைய வான்வெளி தாக்குதலில் ஈரான் நிலைக்குலைந்து போய் உள்ளது. ஈரானின் ராணுவ தளம், யுரேனியம் செறிவூட்டும் மையம் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்கி உள்ளது. ஈரானை தாக்க திட்டமிட்ட இஸ்ரேல் தனது மொசாட் உளவுத்துறை மூலம் ஈரானுக்குள் முன்கூட்டியே ட்ரோன் தளத்தை நிறுவி அங்கிருந்து இன்று காலையில் ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஆபரேட் செய்து ஈரானை தாக்கி உள்ளது. இது எப்படி நடந்தது? வாங்க பார்க்கலாம்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் இன்று கடுமையாகி உள்ளது. இன்று அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. ஈரானில் உள்ள ராணுவதளங்கள், அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் தளம் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.

how-did-israels-mossad-intelligence-agency-builds-a-drone-base-inside-the-iran-and-how-it-will-he

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ட்ரோன், போர் விமானங்கள், ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஈரான் மீது இஸ்ரேல் எப்படி தாக்குதல் நடத்தியது? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆனால் அதனை சாமர்த்தியமாக செய்து முடித்துள்ளது இஸ்ரேலின் ‛மொசாட்' உளவுத்துறை.

ஏனென்றால் ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அந்த நாட்டின் ‛மொசாட்' உளவுத்துறை தான். முதலில் இந்த தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. தாக்குதல் செயல்முறையை இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை கையில் எடுத்துள்ளது. உலகில் உள்ள உளவு துறைகளில் மொசாட் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதில் உள்ளவர்கள் மிகவும் திறமையாக சிந்தித்து எதிரிகளை கதறவிடுவார்கள். இருப்பினும் ஈரான் மீது இஸ்ரேலால் அவ்வளவு சுலபமாக தாக்க முடியாது. ஏனென்றால் இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகளுக்கு இடையே 2,300 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் - ஈரான் இடையே ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

இதனால் போர் விமானம், ஏவுகணை உள்ளிட்டவற்றால் இஸ்ரேலை ஈரானும், ஈரானை இஸ்ரேலை தாக்க வேண்டும் என்றால் அது ஜோர்டான், ஈராக் வான்பரப்பை கடந்து தான் நடக்க வேண்டும். இதனால் அது ரொம்பவே ரிஸ்க். இதனால் இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் மாற்றி யோசித்தது. ஈரானை ட்ரோன் மூலம் தாக்க திட்டமிட்டது. இதனால் முதலில் ஈரானுக்குள் தங்கள் நாட்டு ட்ரோனை கொண்டு செல்ல மொசாட் உளவுத்துறை திட்டம் வகுத்தது.

அதன்படி, ஈரானில் சொந்தமான ட்ரோன் தளத்தை அமைக்க மொசாட் உளவுத்துறை முடிவு செய்தது. அதனை வெற்றிகரமாக செய்தும் முடித்தது. இந்த ட்ரோன் தளம் என்பது ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அமைக்கப்பட்டது. மேலும் கடந்த ஓராண்டுகளாக அங்கு ட்ரோன் வல்லுநர்களை இஸ்ரேல் அனுப்பியது. இங்கு ஏராளமான ட்ரோன்கள் தயார் நிலையில் இருந்தது. இந்த ட்ரோன் தளம் இஸ்ரேலுக்கு சொந்தமானது. ‛மொசாட்' உளவுத்துறை தான் அமைத்து உள்ளது என்பது ஈரானுக்கு தெரியாது. இதனை கண்டுபிடிப்பதில் ஈரான் உளவுத்துறை கோட்டைவிட்டது.

இதற்கிடையே தான் இன்று காலையில் ஒரே நேரத்தில்து ட்ரோன்கள் ‛ஆபரேட்’ செய்யப்பட்டு இலக்குகளை நோக்கி சென்று தாக்கியது. இதனை இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன்கள் ஈரானின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை தாக்கி அழித்தன. அதன்பிறகு, இஸ்ரேலில் இருந்து போர் விமானங்கள், ஏவுகணைகள் ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளன.

ஏவுகணை தளம், யுரேனியம் செறிவூட்டு மையங்களை நோக்கி சென்று தாக்குதல் நடத்தின. அதுமட்டுமின்றி மத்திய ஈரானுக்குள் நுழைந்த ‛மொசாட்' உளவுத்துறையை சேர்ந்தவர்கள் துல்லிய தாக்குதலுக்கான குண்டுவீச தேவையான ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து வைத்திருந்தனர். இப்படி, ஈரானின் உளவுத்துறையின் கண்ணில் மண்ணை தூவி இஸ்ரேல் ‛மொசாட்' உளவுத்துறை வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி உள்ளது.

இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை இப்படி அடுத்த நாட்டுக்குள் நுழைந்து எதிரிகளை அழிப்பது ஒன்றும் புதிது அல்ல. ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹெஸ்புல்லாக்களை வைத்து ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஹெஸ்புல்லாக்களை பழிவாங்க இஸ்ரேலின் ‛மொசாட்' அமைப்பு முடிவு செய்தது.

ஹெல்புல்லாக்கள் தங்களின் தகவல் பரிமாற்றத்துக்காக பேஜர்களை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் பேஜர்கள் மூலமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டது ‛மொசாட்’. அதன்படி ஹங்கேரியில் ஹெஸ்புல்லாக்களுக்கு ‛பேஜர்’ தயாரிக்கும் நிறுவனத்தை கண்டுபிடித்த ‛மொசாட்’ அந்த பேஜர்களுக்குள் வெடிப்பொருட்களை வைத்தது. அதன்பிறகு ஒரே நேரத்தில் பேஜர்களை வெடிக்க வைத்து ஹெஸ்புல்லா அமைப்பினரை அழித்தது. இந்த சம்பவம் அப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டது. மொசாட் அமைப்பின் இந்த செயல்பாடு உலகம் முழுவதும் அதிக கவனம் பெற்றது.

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவின் எரிபொருள் கிடங்கு மற்றும் விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு முன்பாகவே ரஷ்யாவுக்கு தெரியாமலே உக்ரைன் அந்த நாட்டுக்குள் ட்ரோன்களை கொண்டு சென்று இருந்தது. லாரியில் இருந்த ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஆபரேட் செய்து ரஷ்யாவின் 40 போர் விமானங்களை அழித்தது உக்ரைன். அந்த வரிசையில் தற்போது இஸ்ரேல் தனது ‛மொசாட்' உளவுத்துறையின் உதவியுடன் ஈரானில் ட்ரோன் தளம் அமைத்து ஈரானை கதறவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+