ஒசாமாவின் "மாஸ்டர் மைண்ட்".. அல் கொய்தா "தலையை" அமெரிக்கா தூக்கியது எப்படி? டாப் சீக்ரெட் ஆபரேஷன்!
காபூல்: அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டது எப்படி, இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். காபூலில் நேற்று நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் கொலை செய்யப்பட்டார்.
ஒசாமா பின் லேடனின் மறைவை தொடர்ந்து 2011ல் இருந்து அல் கொய்தா அமைப்பின் தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி செயல்பட்டு வந்தார். அதன்பின் 11 வருடங்கள் இவர்தான் தலைவராக இருந்தார்.
இந்த நிலையில்தான் இன்று அய்மான் அல் ஜவாஹிரி கொலை செய்யப்பட்டுள்ளார். 911 தாக்குதலை அமெரிக்காவில் நடத்த முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த தாக்குதலுக்கான ப்ளூ பிரிண்டை போட்டுக்கொடுத்ததே இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நடந்த 2002 கடற்படை தாக்குதலுக்கு பின்பும் அய்மான் அல் ஜவாஹிரி முக்கிய காரணமாக இருந்தார். நேற்று இரவு காபூலில் உள்ள வீட்டில் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் அமெரிக்கா நடத்திய பெரிய டிரோன் தாக்குதல் இது. இந்த டிரோன் தாக்குதல் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் பிடன் இன்று வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.

டிராக் செய்யப்பட்டது எப்படி?
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவின் உளவு மற்றும் தாக்குதல் டிரோன் இப்போதும் பறந்து வருகிறது. தீவிரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு மேலே இந்த டிரோன் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த டிரோன் உடனுக்குடன் தாக்குதல்களை நடத்தாது. தீவிர சோதனை, உளவு பணிகளுக்கு பின்பே தாக்குதல் நடக்கும். தீவிரவாதிகள் வீட்டிற்கு உள்ளே இருப்பது உறுதியானால் மட்டுமே இங்கு தாக்குதல் நடத்தப்படும். இதற்காக பல நாட்கள் வேவு பணிகளை டிரோன் உதவியோடு பார்ப்பார்கள். அந்த வகையில் சிஐஏ மூலம் ஜவாஹிரி இருந்த "சேப் ஹவுஸையும்" வேவு பார்த்து உள்ளனர்.

வெளியே வர மாட்டார்கள்
பொதுவாகவே டிரோன் அட்டாக் குறித்து தீவிரவாதிகளுக்கு தெரியும் என்பதால் அவர்களும் வெளியே வர மாட்டார்கள். வெளியே வந்த முகம் லேசாக தெரிந்தால் கூட டிரோனில் இருக்கும் நவீன கேமரா முகத்தை ஸ்கேன் செய்து கண்டுபிடித்துவிடும். இந்த நிலையில்தான் ஜவாஹிரியும் வெளியே வராமல் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நேற்று அவர் பால்கனிக்கு வந்த போது அவரின் அடையாளம் ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பது ஜவாஹிரிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிஐஏ
இந்த தாக்குதல் சிஐஏ மூலம் நடத்தப்பட்டு உள்ளது. பல நாட்களாக வேவு பார்த்து, அவரின் அடையாளத்தை உறுதி செய்த பின்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜவாஹிரி இருந்த வீடு தலிபான் அமைப்பில் இருக்கும் ஹக்கானி குழுவின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானியின் வீடு என்று கூறப்படுகிறது. இங்குதான் தீவிர பாதுகாப்பிற்கு இடையில் ஜவாஹிரி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த டிரோன் தாக்குதல் நடந்ததும் அங்கே சிஐஏ கிரவுண்ட் டீம் சென்று சோதனை செய்துள்ளது.

ஜவாஹிரி
இந்த சோதனையில் ஜவாஹிரி மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் ஜவாஹிரியின் குடும்பத்தினர் யாரும் கொலை செய்யப்படவில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜவாஹிரியை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இத்தனை காலமாக சிஐஏவிற்கு ஜவாஹிரி போக்கு காட்டி வந்தார். ஆனால் கடந்த 2 மாதமாக அவர் காபூலில் இருக்கும் ஹக்கானி வீட்டில்தான் இருக்கிறார் என்று தகவல் சிஐஏவிற்கு உறுதியாக கிடைத்துள்ளது.

எப்படி?
அதன்பின்தான் கிரவுண்டில் இருக்கும் சிஐஏ ஆட்கள் இந்த வீட்டை கடந்த சில வாரங்களாக தீவிரமாக நோட்டமிட்டு உள்ளனர். ஆனால் அவரின் முகம் மட்டும் தெரியாமல் இருந்தது. அதுவும் பின்னர் அவர் பால்கனிக்கு வரும் போது டிரோன் கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன்தான் காபூலில் உள்ள வீட்டில் ஜவாஹிரி இருப்பதை உறுதி செய்துள்ளார். இதையடுத்தே தாக்குதலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் ஜவாஹிரியின் முகம் உறுதி செய்யப்பட்டு அவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.

சீக்ரெட்
மிகவும் டாப் சீக்ரெட்டாக இந்த ஆப்ரேஷன் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜேக் சல்லிவன், சிஐஏ டாப் அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே இந்த தகவல் தெரியும். நேற்று ஜவாஹிரியின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்ட பின் இரவே situation roomல் அமெரிக்க அதிபர் மீட்டிங் நடத்தி இருக்கிறார். இதில் தாக்குதல் நடத்துவதற்கான இறுதி அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக இரண்டு சிறிய அளவிலான ஏவுகணைகள் டிரோனில் இருந்து ஏவப்பட்டு ஜவாஹிரி கொலை செய்யப்பட்டார்.
-
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications