படக்கென செஸ்போர்டில் கையை விட்ட கிறிஸ்டோபர்.. ஒரே அலறல்.. ரோபோ நசுக்கியதா.. என்னாச்சு?

செஸ் விளையாட்டில் 7 வயது சிறுவனின் விரலை நசுக்கிவிட்டது ரோபோ

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: செஸ் விளையாடி கொண்டிருந்த சிறுவனின் விரலை ஒரு ரோபோ உடைத்துவிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூலை 19ம் தேதி, மாஸ்கோ செஸ் ஓபன் போட்டி நடைபெற்றது.. அன்றுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது..

அப்போது முதலே இணையத்தில் அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. 7 வயது சிறுவன் ஒருவன் இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகிறான்..

 கிறிஸ்டோபர்

கிறிஸ்டோபர்

அவன் பெயர் கிறிஸ்டோபர்.. சிறுவன் விளையாடி கொண்டேயிருக்கும்போது, ரோபோ தன்னுடைய செஸ் காயினை நகர்த்த முனைகிறது.. அதற்குள் அந்த சிறுவன், தன்னுடைய காயினை நகர்த்துவிடுகிறான்.. அப்போது, அடுத்த சில நிமிடங்களில், அந்த ரோபா, சிறுவனின் கையை நசுக்கிவிடுகிறது.. அதாவது, ரோபோவுக்கு விரல் சிக்கியது போல் அந்த வீடியோவில் தெரிகிறது... உடனே அங்கிருந்தோர் பதற்றமடைந்து, குழந்தையை ரோபோ கையின் பிடியில் இருந்து விடுவிக்கின்றனர்.

சிறுவன்

சிறுவன்

ஆனால், சிறுவன் வலியால் அழுகிறான்.. இதுதான் அந்த வீடியோ.. உடனடியாக விடுவிக்கப்பட்டபோதிலும், சிறுவனின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. "7 வயது சிறுவன் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிவிட்டான்.. ரோபோ விளையாடுவதற்கான, தன்னுடைய முறை வரும்போது ஒரு நகர்வை மேற்கொள்ள முயன்றான். ஆனால், இது மிகவும் அரிதான வழக்கு.. சிறுவனுக்கு மோசமான காயங்கள் எதுவும் இல்லை..

 ஆவணங்கள்

ஆவணங்கள்

அவன் தன்னுடைய விரலில் தொடர்ந்து விளையாட முடிந்தது.. விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டு, ஆவணங்களில் கையெழுத்திடவும் முடிந்தது.. சிறுவன் இப்போது நன்றாக இருக்கிறான்... கையில் பிளாஸ்டர் போடப்பட்டுள்ளது.. சீக்கிரம் குணமடைவதற்காக இந்த பிளாஸ்டர் போடப்பட்டிருக்கிறது.. இருந்தாலும், இதுபோன்ற விளையாட்டுக்கெல்லாம் சில பாதுகாப்பு விதிகள் உள்ளன" என்று நீண்ட விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

ஆனால், குழந்தையின் பெற்றோர் இந்த விஷயத்தை சும்மா விடுவது போல் தெரிவதில்லை.. மாஸ்கோ வழக்கறிஞர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள போகிறார்களாம்.. ஆனால், செஸ் போர்டு கமிட்டி, தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முயற்சிக்கும் என்றும் அதிகாரிகள் சொல்லி உள்ளனர்.. 7 வயது சிறுவன் விரலை ரோபா ஒன்று நசுக்கிவிட்டது, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+