நோபல் பரிசுத் தொகையை ஒபாமா எப்படி செலவு செய்தார்?
ஸ்டாக்ஹோம்: நோபல் பரிசு பெற்றவர்கள் அந்த பரிசுத் தொகையை எப்படி செலவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
நோபல் பரிசு பெறுபவர்கள் அந்த பரிசுத் தொகையை எப்படி செலவு செய்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படும். நாளை மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இறுதியாக பொருளாதாரத்திற்கான பரிசு அறிவிக்கப்படும்.
பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தான் வெற்றி பெற்றவர்கள் பரிசுத் தொகையான ரூ. 7.69 கோடியை (ரூ. 7,69,84,275.45) எப்படி செலவு செய்வார்கள் என்பது தெரிய வரும். ஏற்கனவே நோபல் பரிசு வாங்கியவர்களில் சிலர் தங்கள் பரிசுத் தொகையை வைத்து என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

பைக்
2001ம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற சர் பால் நர்ஸ் தனது பரிசுத் தொகையை வைத்து மோட்டார்பைக்கை அப்கிரேட் செய்யத் திட்டமிட்டார்.

வீடு
2001ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை தனது சக ஊழியர்கள் இருவருடன் பகிர்ந்து கொண்ட மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த உல்ப்காங் கெட்டர்ல் தனது பரிசுத் தொகையை வைத்து வீடு வாங்கினார், குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்தார்.

பெரிய வீடு
1993ம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்ற பிலிப் ஷார்ப் தனது பரிசுத் தொகையை வைத்து பெரிய வீடு ஒன்றை வாங்கினார்.

ஒபாமா
2009ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பரிசுத் தொகையை அப்படியே நன்கொடையாக அளித்தார். இதே போன்று 2012ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஐரோப்பிய யூனியன் பரிசுத் தொகை முழுவதையும் தானம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உட்ரோ வில்சன்
1919ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் ஓய்வுக்கு பிறகு தனது வாழ்க்கை என்னவாகுமோ என்று நினைத்து பரிசுத் தொகையை அப்படியே ஸ்விஸ் வங்கியில் போட்டுவிட்டார்.

கிராமீன் வங்கி
கிராமீன் வங்கி நிறுவனர் வங்க தேசத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் முகமது யூனுஸுக்கு கடந்த 2006ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. அவர் தனது பரிசுத் தொகையை வைத்து கண் மருத்துவமனை மற்றும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் வியாபாரத்தை துவங்கப் போவதாக அறிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications