இதயத்தை கிழித்த புல்லட்.. 5 மணி நேரம் போராட்டம்.. ஷின்சோ அபேயை காப்பாற்ற முடியவில்லை.. டாக்டர்கள்
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட நிலையில் அவரை காக்க 5 மணி நேரமாக மருத்துவர்கள் போராடியும் இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே (67) 30 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர். ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக நீடித்தவர் ஷின்சோ மட்டுமே. இவர் பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவர் அறிவுரைபடி தனது பதவியை 2020 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் நேற்று அவர் ஜப்பானின் நாரா பகுதியில் அதாவது டோக்கியோவிலிருநது 500 கி.மீ. தூரம் உள்ள பகுதியில் ரயில் நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார். நேற்று காலை 11.30 மணி இருக்கும், அப்போது அவரை பின்புறத்திலிருந்து ஒருவர் சுட்டார்.

ஆம்புலன்ஸ்
இதில் சரிந்து விழுந்த அவரை ஆம்புலன்ஸ் வருவதற்குள் அங்கிருந்த மக்கள் காப்பாற்ற முயன்றார்கள். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிடவே அவரை நாரா மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனையில் மதியம் 12.30க்கு அனுமதித்தனர். அங்கு அவர் இதயம் மற்றும் மூச்சு செயலற்ற நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

இதயத்தை துளைத்தது
அவரது உயிரை காப்பாற்ற பல முயற்சிகளை மருத்துவர்கள் செய்தனர். ரத்தம் ஏற்றப்பட்டது. மாரடைப்புக்கான அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. எனினும் அவர் துரதிருஷ்டவசமாக நேற்று மாலை 5.30 மணிக்கு மறைந்தார். அவரது மார்பு மற்றும் கழுத்து பகுதியில் சுட்டதால் நிறைய ரத்தம் வெளியேறியுள்ளது.

இரு தோட்டாக்கள்
அவரது உடலில் இரு தோட்டாக்கள் துளைத்திருந்தன. அதில் ஒன்று இதயத்தை கிழித்துவிட்டது. இதயத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டுவிட்டது. மற்றொன்று காயங்களை மோசமாக்கியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடியும் அது பலனை கொடுக்கவில்லை.

ஒருவர் கைது
ஷின்சோ அபேயை டெட்சுயா யமகாமி என்பவர் சுட்டுக் கொன்றார். கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அபேயை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் யமகாமி சொந்தமாக துப்பாக்கியை தயாரித்துள்ளது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications