"வெறும் 20 நிமிடங்கள்.." மொத்தமாக மாறிய சீன்.. சிறையில் இருந்து வெளியே வந்த டிரம்ப்.. எப்புட்றா
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று கைதாகி விடுதலையான நிலையில், அவர் சிறையில் இருந்தது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டொனால்ட் டிரம்ப், அங்கு ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறந்தவர். அதன் பிறகு ரியாலிட்டி டிவி நட்சத்திரமாக மாறிய அவர், அரசியலிலும் நுழைந்த அதிரடி காட்டினார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகப் பதவிக்கு வந்த அவர், நான்கு ஆண்டுகள் அதிபராக இருந்தார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெற்றிருந்தார்.
டிரம்ப்: அதிபராக இருந்த போதே டிரம்ப் வரிசையாகப் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். தடாலடி உத்தரவுகள், மோசமான கருத்துகள் என்று டிரம்ப் அப்போதே வரிசையாகப் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். அடுத்து 2020இல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பைடன் டிரம்பை வீழ்த்தினார். அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபராக இருந்த போது, தேர்தலில் தோல்வியடைந்த நபர் என்ற பெயரையும் டிரம்ப் பெற்றார்.
இருப்பினும், அதன் பிறகு அவர் செய்தது தான் மோசமான செயல். அதாவது தேர்தலில் தான் அடைந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் மிகப் பெரிய முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.. ஒரு கட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற அலுவலகத்திலும் உள்ளே புகுந்து பிரச்சினை செய்தனர். இது 200 ஆண்டு அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான கருப்பு நாளாகப் பார்க்கப்பட்டது.
சரணடைந்தார்: இது தொடர்பாக டிரம்ப் மீது பல்வேறு மாகாணங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி ஜார்ஜியா மாகாணத்தில் இது குறித்த வழக்கு நடந்த நிலையில், டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டிரம்ப் சரணடைய உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்றிரவு டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதைத் தொடர்ந்து அனைத்து குற்றவாளிகளுக்கும் செய்யப்படுவது போல டிரம்பிடம் இருந்து கைரேகை சேகரிக்கப்பட்டது. மேலும், ஜெயிலில் வைத்து அவரது போட்டோவும் எடுக்கப்பட்டது. அந்நாட்டின் சட்டப்படி அனைத்து குற்றவாளிகளுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படும். அதன்படி டிரம்பிடமும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர் இதுபோல கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வெறும் 20 நிமிடம்: டிரம்ப் கைது செய்யப்பட்ட போதிலும், அவர் மீதான விசாரணை இன்னும் முழுமையாக முடியவில்லை. இதன் காரணமாக டிரம்ப் வெறும் 20 நிமிடங்களுக்குக் குறைவாகவே சிறையில் இருந்தார். அதன் பிறகு 2 லட்சம் டாலர் பாண்டில் அவர் வெளியே வந்துவிட்டார். இது இந்திய மதிப்பில் 1.65 கோடியாகும். அவர் பிணையில் வெளியே வந்த நிலையில், அவருக்கு எதிர்த் தரப்பை சமூக வலைத்தளங்கள் வழியாக மிரட்டக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே டிரம்ப்பிற்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்படும். அதன் பின்னரே அவர் சிறையில் அடைக்கப்படுவார்.. இருப்பினும், டிரம்ப் சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அந்நாட்டு சட்டப்படி எந்தவொரு தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications