Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில நிமிடங்களில் அடுத்தடுத்து சரிந்த மக்கள்! 150 பேர் மூச்சு திணறி பலி! தென் கொரியாவில் நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டம் கொடூரமான விபத்தாக மாறிய நிலையில், அங்கு என்ன நடந்தது என்பது குறித்துப் பரபர தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவீன் கொண்டாடப்படும். இதில் மக்கள் இரவு நேரத்தில் வித்தியாசமான உடைகளை அணிந்து வலம் வருவார்கள்.

முதலில் அமெரிக்காவில் மட்டுமே இது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் சிறப்பாகவே நடந்து வருகிறது.

 தென் கொரியா

தென் கொரியா

அப்படித்தான் நேற்று இரவு தென் கொரியத் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடந்தது. ஆனால், துருதிஷ்டவசமாக இந்த ஹாலோவீன் கொண்டாட்டம் மிகப் பெரிய விபத்தாக மாறியுள்ளது. கிளப் மற்றும் பப்களுக்கு பெயர் போன இடாவோனில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக ஒரே இடத்தில் பல ஆயிரம் பேர் ஒன்று கூடினர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அடுத்தடுத்து பலருக்கும் மாரடைப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இப்படி பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதால், அடுத்தடுத்து அவர்கள் சரிந்தனர். இந்த மோசமான விபத்தில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர்.. மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்குச் சுகாதார பணியாளர்களும், தன்னார்வலர்களும் CPR கொடுக்க முயன்ற போதும், அது பெரியளவில் பலன் தரவில்லை.

 நடந்தது என்ன

நடந்தது என்ன

நேற்று சுமார் ஒரு லட்சம் பேர் அந்த இடத்தில் ஒன்று கூடியதாகக் கூறப்படுகிறது. அப்போது தான் இந்த மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இதனிடையே இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு நெரிசலில் சிக்கியவர்களே இது குறித்து சில கருத்துகளைக் கூறியுள்ளனர். அதாவது அங்குக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும் முன்னரே கூட நகரவே முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்ததாகக் கூறுகின்றனர்.

 கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசல்

தங்களை மீட்பதற்கு முன் ஒரே இடத்தில் சுமார் 1.5 மணி நேரம் சிக்கியிருந்ததாக இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "அங்கு மிகவும் குழப்பமாக இருந்தது. முதலில் சிலர் வெளியேற முயன்று, அருகே இருந்தவர்களைத் தள்ளினர். இதன் காரணமாகவே அங்கிருந்தவர்கள் கீழே விழத் தொடங்கினர். இது தொடர் நிகழ்வுகளுக்கு வழி வகுத்து, அப்படியே பலரும் கீழே விழுந்தனர். இதனாலேயே பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது" என்றார்.

 படத்தில் வருவதைப் போல

படத்தில் வருவதைப் போல

இந்தச் சம்பவத்தில் நெரிசலில் இருந்து தப்பியவர்களுக்கு உயிர் பிழைத்துவிட்டனர். நெரிசலில் சிக்கியவர்களுக்குத் தான் மூச்சுத் திணறலும் மராடைப்பும் ஏற்பட்டு உள்ளது. திரைப்படங்களில் வருவதைப் போல அடுத்தடுத்து பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு, சரிந்தனர். அவர்களைக் காப்பாற்ற CPR கொடுத்தும் கூட அது பெரியளவில் பலன் தரவில்லை. இந்தச் சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணைக்குத் தென் கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மோசம்

மோசம்

ஹிப் நைட் லைஃப், பப்கள் என இரவு கேளிக்கை வாழ்க்கைக்குப் பெயர்போன நகரம் தான் தென் கொரியாவின் இடாவோன். இங்கு தான் மோசமான இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, கொரோனாவால் இந்த நகரம் மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டது. இப்போது தான் நகரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+