1 வீரருக்கு பதிலாக.. வளைந்து கொடுத்து.. 1000 கைதிகளை விடுவித்த இஸ்ரேல்.. அதில் ஒருவர்தான் சின்வார்!
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு பல ஆண்டுகளாகக் குடைச்சல் கொடுத்து வந்த ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இது இஸ்ரேலுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், சின்வார் வலிமையான நபராக மாற ஒரு வகையில் இஸ்ரேல் செய்த தவறு தான் முக்கிய காரணம். கடந்த 2011இல் ஒரு வீரரை விடுவிக்க இஸ்ரேல் தன்வசம் இருந்த 1000+ பயங்கரவாதிகளை விடுவித்தது. அதில் ஒருவர் தான் சின்வார்.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஹமாஸ் போர் இந்த போர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது என்றே சொல்லலாம். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

இது இஸ்ரேலின் வெற்றி என்றாலும் சின்வார் இந்தளவுக்குப் பெரிய பயங்கரவாதியாக இஸ்ரேல் செய்த தவறும் ஒரு முக்கிய காரணம். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பின்னணி: கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம், சுரங்கப்பாதை அமைத்து இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் படை அங்குத் தாக்குதலை நடத்தியது. அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த 19 வயதான இளம் சார்ஜெண்ட் ஷாலித் என்பவரை ஹமாஸ் கடத்தி சென்றது. அவரை மீட்க இஸ்ரேல் உடனடியாக காசாவில் ராணுவ தாக்குதலைத் தொடங்கியது. இருப்பினும், அதற்குள் ஷாலித்தை வேறு சீக்ரெட் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்தன.
இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்றது இஸ்ரேல். அதேநேரம் இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன அமைப்புகள் கூறினர். இஸ்ரேல் தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்கச் சர்வதேச நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேல் தனது வீரரை மீட்கப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தின.
இஸ்ரேல் இறங்கி வர என்ன காரணம்: இதற்கிடையே கடத்தப்பட்ட சார்ஜெண்ட் ஷாலித்தின் குடும்பத்தினரும் தங்கள் மகனை மீட்டுத் தர வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ஒரு வீரர் என்றாலும் நாட்டிற்காக ராணுவத்தில் இணைந்தவரை இஸ்ரேல் கைவிடக்கூடாது என்று வலியுறுத்தினர். சார்ஜெண்ட் ஷாலித்தை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்று உள்நாட்டிலேயே அழுத்தம் அதிகரித்தது. ஏனென்றால் முன்பு ரான் ஆராட் என்ற இஸ்ரேல் விமானப்படை வீரர் ஹிஸ்புல்லா வசம் சிக்கிக் கொண்டார். அவரை இஸ்ரேலால் மீட்க முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அழுத்தம்: அதேநிலை ஷாலித்திற்கு ஏற்படக்கூடாது என்று பலரும் வலியுறுத்தினர்.. இதனால் எப்போதும் ஆயுதம் மூலமாகவே பதிலடி தரும் இஸ்ரேல் இறங்கிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. எகிப்து மத்தியஸ்தம் செய்த நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலித் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒருவருக்குப் பதிலாக சுமார் 1000க்கும் மேற்பட்ட கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டி இருந்தது. அதற்கு முன்பு வரை ராணுவம் மூலமே பதிலடி தரும் நாடாக இருந்த இஸ்ரேல், ஒரு வீரராக இத்தனை பேரை விடுவித்தது சர்வதேச அளவிலும் விமர்சனங்களைக் கிளப்பியது.
சின்வார்: இதில் சின்வார் எங்கு வந்தார் எனக் கேட்கிறீர்களா.. இஸ்ரேல் ரிலீஸ் செய்த அந்த 1000+ வீரர்களில் ஒருவர் தான் சின்வார். 1989ல் இரு இஸ்ரேல் வீரர்களைக் கடத்தி கொலை செய்தற்காக அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சிறையில் இருந்தார். அங்கிருந்தே ஹீப்ரு இலக்கியங்கள் படித்து மொழி பெயர்த்தவர்.
அப்போது பல் பிரச்சினை ஏற்படவே பல் மருத்துவரை வைத்து சிகிச்சை கூட அளிக்கப்பட்டது. வெளியே இப்படித் தெரிந்தாலும், சிறையில் இருந்த போதுதான் சின்வார் இஸ்ரேல் ராணுவம் எப்படிச் செயல்படுகிறது, இஸ்ரேல் உளவுப்படை எப்படி எப்போது யாரைக் குறிவைக்கிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டார். 2011இல் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளில் இஸ்ரேலுக்குப் பெரிய தலைவலியாகக் கொடுக்க தொடங்கினர். எனவே, ஒரு வகையில் பார்த்தால் சின்வார் இந்தளவுக்கு வலிமையாக இஸ்ரேல் அன்று செய்த தவறும் ஒரு முக்கிய காரணம்.












Click it and Unblock the Notifications