போச்சே! லூனா 25 விண்கலம் நிலவில் நொறுங்கியது ஏன்? ரஷ்யாவின் 47 ஆண்டு கனவு தகர்ந்தது எப்படி? விபரம்
மாஸ்கோ: இந்தியாவை போல் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. இந்நிலையில் தான் லூனா -25 விண்கலம் நிலவில் மோதியது ஏன்? 47 ஆண்டுக்கு பிறகு ரஷ்யா எங்கு சறுக்கியது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டம் வகுக்கப்பட்டது. கடந்தமாதம் சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இதில் விக்ரம் லேண்டர், ரோவர் இணைக்கப்பட்டுள்ளன.

பூமி சுற்று வட்டபாதையை சுற்றி முடித்த பிறகு நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் உந்துவிசை கலன் நுழைந்தது. அதன்பிறகு விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கமான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது. நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது.
இதையடுத்து லேண்டரில் இருந்து வெளிவரும் ரோவர் கருவி நிலவின் தென்துருவத்தை 14 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது. கடந்த 2019ல் சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் இருந்த கற்ற பாடங்களை அடிப்படையாக வைத்து சந்திரயான் 3 திட்டம் மூலம் நாளை சாதனை படைக்க இந்தியா காத்து கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தான் நிலவின் சுற்றுவட்டாபாதையில் வலம்வரும் முந்தைய சந்திரயான் 2 ஆர்ப்பிட்டருன் நேற்று சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்தியது.
இதுவரை நிலவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா கால்பதித்து இருந்தாலும் 3 நாடுகளும் தென்துருவத்தில் ஆய்வு செய்யவில்லை. ஏனென்றால் நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வது என்பது எளிமையான காரியம் அல்ல. ஆனால் இந்தியா ரெஸ்க் எடுத்துள்ளது. நாளை இந்தியாவின் விக்ரம் லேண்டர் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கும்பட்சத்தில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும்.
இந்நிலையில் தான் இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யாவும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய லூனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. கடந்த 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் நேரடியாக நிலவை நோக்கி பயணித்தது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்துக்கு முன்பாக நாளை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிடம் இருந்து தட்டிப்பறிக்க ரஷ்யா முயற்சித்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த சனிக்கிழமை லூனா -25ன் நிலவின் சுற்றுவட்டாபாதையை குறைக்கும் பணி நடந்தது. அப்போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதோடு, தொலைதொடர்பு தண்டிக்கப்பட்டது. அதோடு லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. இதனை ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் உறுதி செய்துள்ளது.
இருப்பினும் லூனா - 25 விண்கலம் எப்படி விழுந்து நொறுங்கியது. தவறு எங்கு நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. இதனை ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக ராஸ்கோஸ்மாஸ் ஆராய்ந்து வந்தது. இந்நிலையில் தான் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையமான ராஸ்கோஸ்மோஸ் தலைவரான டைரக்டர் ஜெனரல் யூரி போரிசோவ் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
ரஷ்யாவில் இருந்து நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க லூனா - 25 என்ற விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் 21ம் தேதி (அதாவது இன்று) நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க பணிகள் நடந்தன. இந்த விண்கலத்தின் பிரதான நோக்கம் என்பது நிலவின் தென்துருவத்தில் நீர் உள்பட பிற மூலக்கூறுகளை ஆராய அனுப்பி வைக்கப்பட்டது.
லூனா -25 விண்கலத்தின் செயல்பாடு என்பது நன்றாக இருந்தது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக கடைசி சுற்றுவட்டபாதையில் தூரம் குறைக்கும் பணிகள் நடந்தது. அப்போது திடீரென்று கோளாறு ஏற்பட்டது. தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்துக்கு முக்கிய காரணங்கள் அதில் உள்ள கருவிகள் சரியாக செயல்படாதது தான்.
அதாவது நிலவின் இறுதி சுற்றுவட்டபாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவதற்கான பணிகள் தொடங்கியது. இதற்காக என்ஜின்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் என்ஜின்கள் இயக்கம் மற்றும் தூரம் குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலம் என்பது சனிக்கிழமை மதியம் 2.57 மணி வரை தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பில் இருந்தது. அதன்பிறகு லேண்டர் கருவி நிலவில் விழுந்து நொறுங்கியது. அதோடு ரஷ்யாவில் இருந்து பல தசாப்தங்களாக நிலவு குறித்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. இதுவும் ஒரு காரணம் தான். ஏனென்றால் இந்த காலதாமதம் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தலாம். '' என்றார்.
முன்னதாக ரஷ்யா (அப்போது சோவியத் யூனியன்)கடந்த 1976ல் முதல் முதலாக நிலவு ஆராய்ச்சிக்கு விண்கலம் அனுப்பியது. இத்திட்டம் வெற்றி பெற்றது. ரஷ்யா(சோவியத் யூனியன்), அமெரிக்கா, சீனா உள்ளிட்டவை மட்டுமே நிலவில் விண்கலத்தை இறங்கி உள்ளனர். அதன்பிறகு 1976க்கு பிறகு ரஷ்யா நிலவு குறித்த ஆராய்ச்சியை தள்ளிவைத்து இருந்தது. இத்தகயை சூழலில் தான் இந்தியாவின் சந்திரயான் 3க்கு போட்டியாக நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா சார்பில் லூனா 25 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications