வங்கதேசத்தை கைக்குள் வைக்க.. பாகிஸ்தான் உளவு அமைப்பு செய்யும் பகீர் திட்டம்
டாக்கா: வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்கு எதிரான குரல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது. இப்படியான சூழலில் தான் வங்கதேசத்தை கைக்குள் வைக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்யும் சதிவேலைகள் குறித்த பகீர் திட்டம் வெளியாகி உள்ளது.
வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இவர் நம் நாட்டுக்கு எதிராக நிலைப்பாட்டுடன் உள்ளார். ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
அதாவது வங்கதேசத்தில் 2026 பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) என்ற மாணவர் தலைவர் களமிறங்கினார். ‛இன்கிலாப் மஞ்சா' என்ற மாணவர் போராட்டக் குழுவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை முன்னின்றி வழிநடத்தியவர்களில் ஒருவர்.
இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். காயமடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதுதான் தற்போதைக்கு வன்முறைக்கு முக்கிய காரணம். கொலையாளிகளை கைது செய்யக் கோரி டாக்கா உட்பட பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பத்திரிகை அலுவலகங்கள், இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது கல்வீசப்பட்டது. இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்தவர் தீபு சந்திர தாஸ் (30) என்ற இந்து இளைஞர் எரித்த கொலை செய்யப்பட்டார். இதற்கு முகமது யூனுஸ் கண்டனம் தெரிவித்தாலும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது வங்கதேசத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. வன்முறை கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் தான் வங்கதேச வன்முறை தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலின் பின்னணியில் பலரது சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த வன்முறையை கட்டுப்படுத்த முகமது யூனுஸின் இடைக்கால அரசு விரும்பவில்லை. இதனால் பயங்கரவாத சக்திகள் வங்கதேசத்தில் வன்முறையை அரங்கேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுஒருபுறம் இருக்கா பாகிஸ்தான் உளவுத்துறை வங்கதேசத்தை தனது கைக்குள் வைக்க சதி திட்டம் தீட்டி செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
வங்கதேசம் என்பது பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்தது. வங்கதேசம் தனிநாடாக 1971ம் ஆண்டு உதயமானது. அப்போது நம் நாட்டின் ராணுவம் தான் பாகிஸ்தான் ராணுவத்தை சரணடையவைத்து வங்கதேசத்தை உருவாக்கியது. இதையடுத்து வங்கதேசத்துக்கும், பாகிஸ்தானுக்குமு் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போதைய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அதனை மாற்றினார். பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார். நம் நாட்டை எதிர்த்து கொண்டு பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார்.
இது நம் நாட்டுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சிறப்பு பிரிவு வங்கதேசத்தில் செயல்பட்டு வருகிறது. அதாவது தலைநகர் டாக்காவில் பாகிஸ்தான் தூதரகம் உள்ளது. அங்கு தான் அந்த உளவுத்துறை சிறப்பு பிரிவு செயல்பட்டு வருதாக கூறப்படுகிறது. அந்த பிரிவில் பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போதை நிலவரப்படி அங்கு ஒரு பிரிகேடியர், இரண்டு கர்னல்கள், நான்கு மேஜர்கள் மற்றும் பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த பல அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த பிரிவு பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சஹீர் ஷாம்ஷாத் மிர்ஸாவின் 4 நாள் வங்கதேச பயணத்திற்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது.
சஹீர் ஷாம்ஷாத் மிர்ஸாவின் மற்றும் மூத்த உளவுத்துறை அதிகாரிகள் வங்கதேசத்தின் தேசிய பாதுகாப்பு உளவுத்துறை (NSI) மற்றும் ஆயுதப்படை உளவுத்துறையின் (DGFI) அதிகாரிகளுடன் ரகசிய மீட்டிங் நடத்தி பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். மேலும் வங்காள விரிகுடாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நம் நாட்டுக்கு அச்சுறுத்தல் கொடுக்க வேண்டும் என்பதும் இந்த மீட்டிங்கின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.
மேலும் தற்போது வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அதனை நடத்துவதற்கு முகமது யூனுஸ்க்கு ஆர்வம் இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் வங்கதேசத்தில் புதிய அரசு வந்தால் பாகிஸ்தான் உடனான உறவு மீண்டும் சீர்குலைய வாய்ப்புள்ளது. இதனால் பாகிஸ்தானும் கூட வங்கதேசத்தில் தேர்தலை விரும்பவில்லை. எனவே வங்கதேசத்தை கைக்குள் வைக்க முகமது யூனுஸ் உடன் சேர்ந்து பாகிஸ்தான் உளவுத்துறையின் பெரிய சதியில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications