"நம்பவே முடியல.." உடலுறவு வேண்டாம்.. பெண் உடலில் இருந்து விந்தணு.. ஆணின் கருமுட்டையை வைத்து குழந்தை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆண்களிடம் இருந்து கரு முட்டைகள், பெண்களிடம் இருந்து விந்தணுக்களை எடுத்து குழந்தைகளை உருவாக்கும் ஆய்வுகள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த உலகில் மனிதர்கள் தொடங்கி அனைத்து உயிரினங்களின் அடிப்படை நோக்கம் என்பது இனப்பெருக்கம் தான்.. இனப்பெருக்கம் இல்லாமல் போனால், உலகம் மொத்தமாக அழியும் என்பதில் சந்தேகம் இல்லை.

 How scientist creates baby with Men Eggs and Womens Sperm with Stem Cell

இனப்பெருக்கம் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆண்களிடம் இருந்து கரு முட்டைகள், பெண்களிடம் இருந்து விந்தணுக்களை எடுக்கும் புது ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

புது ஆய்வு: இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் "இன் விட்ரோ கேமடோஜெனெசிஸ்" என்ற முறையைச் சோதனை செய்கிறார்கள். இதன் மூலம் மனித தோல் செல்களை முட்டைகள் மற்றும் விந்தணுக்களாக மாற்ற முடியும். இதன் மூலம் மனித உடலுக்கு வெளியே (விட்ரோ) முட்டைகள் மற்றும் விந்தணுக்களை (கேமட்கள்) நம்மால் உருவாக்க முடியும்.

அதாவது ஆணின் தோலில் இருந்து எடுக்கப்படும் செல்லை முட்டையாகவும், பெண்ணின் தோலில் இருந்து எடுக்கப்படும் செல்லை விந்தணுவாகவும் மாற்ற முடியும். இதன் மூலம் ஒரு குழந்தைக்கு மரபணு அடிப்படையில் பல பெற்றோர்கள் இருக்கும் வாய்ப்பும் உருவாகும்.. இருப்பினும், இது ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் மட்டுமே இருப்பதாகவும் இந்த வகை சிகிச்சை சாத்தியமாகப் பல ஆண்டுகள் ஆகும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தடைகள் இருக்கு: இந்த புதிய தொழில்நுட்பத்தில் சில தடைகள் இருப்பதாகத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள் அதைச் சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ் "ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்கள்" உடன் தொடங்குகிறது, இதை வைத்து நம்மால் பல்வேறு வகையான செல்களை உருவாக்க முடியும். ஸ்டெம் செல்களை கரு முட்டை அல்லது விந்தணுவாக மாற்றுவதே இதன் நோக்கம்.. இதன் மூலம் இளைஞர்களின் செல்களையும் நம்மால் விந்தணு மற்று கரு முட்டையாக மாற்ற முடியும்.

பேராபத்து! சென்னைக்கு மட்டுமல்ல, பல நகரங்களுக்கு.. திடீரென நகர ஆரம்பித்த உலகின் மிக பெரிய பனிப்பாறை

பல ஆண்டுகளாகவே இது குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2012ஆம் ஆண்டில், இந்த முறையை வைத்து எலி வால்களில் இருந்து எடுக்கப்பட்ட செல்களில் இருந்து ஆய்வாளர்கள் வெற்றிகரமாக எலிகளை உருவாக்கினார்கள். தன்பால் ஈர்ப்பாளர்கள் குழந்தை பெற்றெடுக்க இது பெரியளவில் உதவியாக இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள். இரு பெண் எலிகளின் செல்களை எடுத்து அவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.

மனிதர்கள்: அதேநேரம் இதுவரை மனிதர்களை வைத்து ஆய்வாளர்கள் இந்த சோதனையை மேற்கொள்ளவில்லை. இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால் இதுவரை மனிதர்கள் மீது இது பயன்படுத்தப்படவில்லை. இந்த வகை ட்ரீட்மெண்டால் பல நன்மைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக இப்போது குழந்தையின்மை பிரச்சினை இப்போது அதிகரித்து வரும் நிலையில், அதற்குச் சிகிச்சை அளிக்கவும் இது பெரியளவில் உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல தன்பால் ஈர்ப்பாளர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சட்ட ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் இதில் சில சிக்கல்கள் இருக்கும் நிலையில், அந்த பிரச்சினைகளைச் சரி செய்தால் இது மனிதக் குலத்திற்கு ரொம்பவே முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+