பாதுகாப்பிற்கு பெயர் போன ஜப்பானில்.. பற்றி எரிந்த விமானம்! உண்மையில் அங்கே என்ன நடந்தது! பகீர் தகவல்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் மிக மோசமான விமான விபத்து அரங்கேறியுள்ள நிலையில், அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த 2024 ஆரம்பமே ஜப்பான் நாட்டிற்கு மோசமாக இருந்துள்ளது. முதலில் புத்தாண்டு தினத்தில் ஜப்பான் நாட்டில் மிக மோசமான நிலநடுக்கம் தாக்கியது.. தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால் 30 பேர் உயிரிழந்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே ஜப்பான் நாட்டில் மற்றொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
விமான விபத்து: பாதுகாப்பிற்குப் பெயர் போன ஜப்பான் நாட்டில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் தரையிறங்கும் போது ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விபத்து தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில் விமானம் தீப்பற்றி எரிந்தவாறு சில கொஞ்ச தூரம் செல்கிறது. அதன் பிறகு விமானம் திடீரென வெடித்துச் சிதறுகிறது. இவை அனைத்தும் அதில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த விமானத்தில் எட்டு குழந்தைகள் உட்பட 367 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் சில நொடிகளில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்படி தீ பிடித்தது: அதாவது இந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் போது அங்கே இருந்த கடற்படைக்குச் சொந்தமான சிறு விமானத்தில் இது மோதியதாகத் தெரிகிறது. அதுவே இந்த விமான விபத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது. இந்த பெரிய விமானம் மோதியதில் கடற்படை விமானம் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. அதில் மொத்தம் 6 பேர் இருந்த நிலையில், அதில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மற்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.
விபத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பயணிகள் விமானமும் கடற்படை விமானமும் மோதிக் கொண்டதே இதற்குக் காரணம் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றனர். மத்திய ஜப்பான் பகுதியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவவே இந்த கடற்படை விமானம் தயாராக இருந்துள்ளது. அப்போது தான் இந்த கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
விசாரணை: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பயணிகள் விமானம் கடற்படை விமானத்துடன் மோதியது போலத் தெரிகிறது. ஆனால், இது குறித்துக் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு விமானங்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் உரிய விசாரணை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார். இது மனித தவறா அல்லது தொழில்நுட்ப தவறா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே விமானத்தின் உள்ளே இருந்த ஒரு பயணி ஒருவர் எடுத்த வீடியோவும் இணையத்தில் பரவுகிறது. அதில் விமான கேபின் அடியில் தீ வருகிறது. அதன் பிறகு மளமளவென கேபின் முழுக்க புகை சூழ்வது தெளிவாகத் தெரிகிறது.. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மீண்டும் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூடல்: ஒரு பக்கம் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், மறுபுறம் விமானத்தில் இருந்த தீயை அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். இருப்பினும், அதற்குள் விமானம் முழுக்க எரிந்து நாசமானது. இந்த விபத்து காரணமாக ஹனேடா ஏர்போர்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கே தரையிறங்க வேண்டிய விமானங்கள் அருகே உள்ள ஏர்போர்ட்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications