உலகை நடுங்க வைக்கும் சீரியல் கில்லர்.. 42 பெண்களை கொன்று குப்பை கிடங்கில் வீசிய சைக்கோ இளைஞர்!
நைரோபி: கென்யாவில் கொடூரன் ஒருவன் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், பாதிக்கப்பட்ட பலரது உடலைச் சிதைத்து, உடல் உறுப்புகளைப் போட்டு, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஒரு குப்பைக் கூடத்தில் வீசி இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல மிரள வைக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
உலகில் சில வகையான கொடூரமான சீரியல் கில்லர்கள் இருப்பார்கள். அப்படி தான் கென்யாவில் இருக்கும் ஒரு சீரியல் கில்லர் உலக நாடுகளை மிரள வைத்து இருக்கிறான். இது குறித்து நாம் பார்க்கலாம்.

வீடு முழுக்க ஆயுதங்கள்: கென்யாவில் இருக்கும் அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டபோது போலீசார் மிரண்டு போனார்கள். வீடு முழுக்க அரிவாள், ரப்பர் கையுறைகள், செலோடேப் ரோல்கள், நைலான் சாக்குகள் உள்ளிட்டவை அங்கே இருந்துள்ளன. இந்த கொடூரன் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், பாதிக்கப்பட்ட பலரது உடலைச் சிதைத்து, உடல் உறுப்புகளைப் போட்டு, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஒரு குப்பைக் கூடத்தில் வீசி இருக்கிறார். போலீசார் விசாரணையில் இந்த குற்றங்களை எல்லாம் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த கொடூரங்களை எல்லாம் செய்தவர் கென்யா நாட்டை சேர்ந்த 33 வயதான காலின்ஸ் ஜுமைசி. இவரை அந்நாட்டு மக்கள் ஒரே "காட்டேரி" என்றே சொல்கிறார்கள். மனித உயிருக்கு மரியாதை இல்லாத பலரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். கென்யாவில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், இந்த படுகொலை குறித்த தகவல் மிரள வைப்பதாக இருக்கிறது.
குப்பைக் கிடங்கில் சடலங்கள்: கென்யா தலைநகர் நைரோபியின் முகுரு என்ற பகுதியில் குப்பைக் கிடங்கு இருக்கிறது. கைவிடப்பட்ட குவாரியான இதை அப்பகுதியினர் குப்பைக் கிடங்காக மாற்றிப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அங்கே சில வாரங்களுக்கு முன்பு ஒன்பது பெண்களின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூர் மக்கள் அங்கே குப்பைகளைக் கொட்டிய நிலையில், இந்த கொடூரன் அதையே தான் கொலை செய்த பெண்களின் உடல்களை வீசி எறியப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.
இந்த குப்பைக் கிடங்கிற்கு அருகே உள்ள பாழடைந்த ரூமில் தான் ஜூமைசி வசித்து வந்துள்ளார். அவர் பெண்களை மயக்கி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவர்களைக் கொன்று உடல் பாகங்களைச் சிதைத்துள்ளனர். உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே இதன் பின்னணியில் ஜூமைசி தான் இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்த போலீசார் அவனைக் கைது செய்தனர். அவன் தனது மனைவி உட்பட பலரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். கடந்த 2022 முதலே இதுபோல அப்பாவி பெண்களைப் பிடித்து ஜூமைசி கொலை செய்து இருக்கிறான்.
திட்டம்: கலுஷாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில், அங்கே பல மொபைல் போன்கள், அடையாள அட்டைகள் மற்றும் கொலை செய்துவிட்டு பெண்களின் உடல்களைப் போடச் சாக்குகளை அவர் வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது அவன் ஒவ்வொரு கொலையையும் எந்தளவுக்குத் திட்டமிட்டுச் செய்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது.
சிதைந்த உடல்கள்: இதில் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் எல்லாமே சிதைந்த நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளன. சாக்குகளில் பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட கைகால்கள் மற்றும் உடல் பகுதிகள் இருந்தன. மேலும் எந்த சடலத்திலும் புல்லட் காயங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஎன்ஏ சோதனை மூலம் உடல்களைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
பெண்கள் மாயமானதாக அளிக்கப்படும் புகார்களை கென்ய போலீசார் உரிய முறையில் விசாரித்து இருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகச் சென்றிருக்காது என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications