''விமானம் கடலுக்குள் விழுந்தது'': இன்மார்சாட் உதவியோடு முடிவுக்கு வந்த மலேசியா!
லண்டன்: இங்கிலாந்தின் இன்மார்சாட் நிறுவனம் 19ம் நூற்றாண்டு இயற்பியல் தத்துவத்தை பயன்படுத்தி தான் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்துள்ளதாம்.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமானது. இந்நிலையில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பொருட்களை பார்த்ததாக ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்தன.
இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள சாட்டிலைட் நிறுவனமான இன்மார்சாட் செயற்கைக்கோள்களில் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து மாயமான விமானம் கடைசியாக எங்கு இருந்தது என்பதை கண்டுபிடித்து மலேசியாவிடம் தெரிவித்தது.

35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆபரேட்டர்களில் ஒன்று. அந்த நிறுவனம் 19ம் நூற்றாண்டு இயற்பியல் தத்துவத்தை பயன்படுத்தி விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடித்துள்ளது.
மாயமான விமானத்தின் தகவல் தொடர்பு சிஸ்டம்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போதிலும், அதில் இருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல் கிடைத்துள்ளது. அதாவது தரையில் உள்ள நிலையத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல் சென்றதும் அதில் இருந்து விமானத்திற்கு சிக்னல் சென்றுள்ளது. இதையடுத்து விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல் சென்று அங்கிருந்து பூமியில் உள்ள நிலையத்திற்கு சிக்னல் வந்துள்ளது.
இந்த சிக்னல்களை கணக்கிட்டு தான் அந்நிறுவனம் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்ததை தெரிவித்துள்ளது. இதை வைத்து தான் மலேசிய அரசு விமானம் கடலுக்குள் விழுந்து மூழ்கிவிட்டது என்ற முடிவுக்கு வந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications