இந்தியாவை விடுங்க.. வங்கதேச புரட்சியால்.. வேறு ஒரு இந்திய தொழில் அதிபருக்குத்தான் ஆப்பு! போச்சு
டாக்கா: வங்கதேசத்தில் நடந்து உள்ள மாபெரும் அரசியல் மற்றும் மாணவர் புரட்சி இந்தியாவிற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துமோ அதே அளவிற்கு சிக்கலை இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் ஏற்படுத்தும்.. அவர் அதானி!
வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்து உள்ளனர். அங்கே வீட்டை சூறையாடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரே ஒரு இடஒதுக்கீடு சட்டம்தான் அங்கே இந்த போராட்டம் நடக்க முக்கிய காரணம் ஆகும்..

வங்கதேசத்தில் நடக்கும் போராட்டம் மற்றும் கலவரத்தில் குறைந்தது 98 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பிரதமர் ஹசீனா பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் அங்கே ஒரு வாரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த ஜூலை 19 கொண்டு வரப்பட்ட அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதில் 98 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
போராட்டம்: பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 1971ல் நடத்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் வரை இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது போரில் கலந்து கொண்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்தே அங்கே போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அமைப்பு பாரபட்சமானது என்றும், பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாணவர்கள் முதலில் போராட்டத்தில் குதித்தனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்தான் முதலில் போராட்டத்தில் குதித்தனர். .
அதானிக்கு சிக்கல்: அதானி நிறுவனம் வங்கதேசத்தில் மின்சார ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது. இலங்கையில் மேற்கொண்டது போல வங்கதேசத்தில் மின்சார ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது. அங்கே இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது. வங்கதேச அரசு சார்பாக இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டாலும் அங்கே எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
தற்போது நடந்த போராட்டத்திலும் கூட அதானி விவகாரம் ஒரு விவாதமாக வைக்கப்பட்டது. இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்.. அதற்கு பதிலாக சாதாரண மெரிட் சிஸ்டம் வேண்டும் என்றும் அறிவித்து இவர்கள் போராட்டம் செய்ய தொடங்கினர். இந்த போராட்டம் தற்போது உச்சம் அடைந்து உள்ளது. இடஒதுக்கீடு மட்டுமின்றி 15 வருடங்களாக ஹசீனா ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த மக்கள் விலைவாசி தொடங்கி பாதுகாப்பு வரை பல விஷயங்களை குறிப்பிட்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் போராட்டம் தற்போது அங்கே அரசுக்கு எதிரான போராட்டாமாக மாறி உள்ளது.
அதானிக்கு சிக்கல்: இதில் அதானி விவகாரமும் முன் வைக்கப்பட்டது. அங்கே தற்போது அதானி ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. . இந்தியாவிற்கு வங்கதேச பிரச்சனை எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துமா அதே அளவிற்கு சிக்கலை இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் அதானிக்கும் ஏற்படுத்தும்.
தற்போது இரண்டு நாட்டு உறவு உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஷேக் ஹசீனா வெளியேற்றம் காரணமாக இந்தியா வங்கதேசம் உறவு இனி நீடிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இப்போது வங்கதேச அரசு உடைய காரணம் அமெரிக்கா செய்த வேலை அல்லது சீனா செய்த வேலை என்று கூறப்படுகிறது. இரண்டில் ஒரு நாடு பாகிஸ்தான் மூலமாக வங்கதேச ஆட்சியை கவிழ்த்து உள்ளது.
இதை இந்தியா கணிக்க தவறிவிட்டது. இல்லையென்றால் இந்தியா இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட தவறிவிட்டது என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. இது அதானிக்கும் எதிராக திரும்பும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications