பிலிப்பைன்ஸில் கடும் நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி! சுனாமி எச்சரிக்கை இல்லை
பிலிப்பைன்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
மணிலா : பிலிப்பைன்ஸில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
ரிக்டர் ஸ்கேலில் 7.3ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்ஸ்க்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே செலிப்ஸ் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலுக்கடியில் 617 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானது. கடலுக்கு மிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்ததால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications