வெள்ளக்காடான பிரேசில்! கொட்டித் தீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 96 பேர் பலி.. திக் காட்சிகள்
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 96 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பெட்ரோபொலிஸ் நகரத்தில் 6 மணி நேரத்திற்குள் 26 செ.மீ மழை பெய்திருக்கிறது. ரியோ டி ஜெனிரோ நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரியோ டி ஜெனிரோவில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்திருக்கிறது. நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
|
மழை
கடந்த இரு வாரங்களுக்கு முன், பிரேசிலில் தென் கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரேசில் தலைநகரை கனமழை புரட்டிப்போட்டு வருகிறது. பெட்ரோபோலிஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள மலை நகரங்களில் 35 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி இருக்கிறது. இதனால், நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்தது. அதையடுத்து, நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
|
உயிரிழப்பு
முதற்கட்ட மீட்புப்பணியின் போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருந்தனர். இன்று காலை உயிரிழப்புகளின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், விவசாய நிலங்களும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
|
மீட்புப் பணி
கனமழை காரணமாக மீட்புப் பணிகள் செய்வதில் இடையூறு ஏற்பட்டது. இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகவே தொடங்கப்பட்டன. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களை பேரிடர் மேலாண்மை படையினர் தேடி வருகின்றனர். கொட்டும் மழைக்கு இடையே மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

உதவி
''பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் ஆறுதல் அளிக்கட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்'' என பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ குறிப்பிட்டுள்ளார். ரியோ டி ஜெனிரோவில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்த வீடியோக்களைப் பார்க்கும் போதே அழிவின் கோரம் புரிகிறது. விரைவில் ரியோ டி ஜெனிரோவும் அந்நாட்டு மக்களும் பேரிடரில் இருந்து மீண்டு வரட்டும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications